Bigg Boss 7 | Day 13 | போட்டியாளர்களுக்கிடையே நடந்த மோதல்களுக்கு கமல் சொன்ன தீர்ப்பு என்ன?

“பாவம் போனா போகுதுன்னு இவங்களுக்கு சமைச்சு கொடுத்தா, அது சரியில்ல, இது சரியில்ல, காரம் கம்மி, உப்பு நிறைய…ன்னு சொல்றதோட, பருப்பு எவ்வளவு இருக்கு, அரிசி எவ்வளவு இருக்குன்னு... வந்து இன்பெக்‌ஷன் பண்ண இதென்ன இவங்க வீட்டு கிச்சன் கணக்கா?” - விஷ்ணு
பிக்பாஸ் Day 13
பிக்பாஸ் Day 13புதிய தலைமுறை

"அடுத்த வாரம் கேப்டன்ஷிப்பிற்காக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கிறார்கள். அவர்கள் யாரென பார்த்துவிட்டு வரலாம்"

- என்று கமல் கூறி நிகழ்சியை ஆரம்பித்து வைக்கிறார். அகம் டீவி நம்மை அகத்திற்குள் கூட்டி செல்கிறது. அங்கு விசித்திரா, கூல் சுரெஷ் மற்றும் பிரதீப் மூவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். “3 வாரத்துல பிரதீப்பிடம் நல்ல மாற்றம் தெரியுது” என்கிறார் விசித்திரா (ஜோதிடம் பார்ப்பவர் மாதிரி). அதற்கு பிரதீப் “நான் அப்படியேதான் இருக்கேன். உங்க பார்வையில் மாற்றம் இருக்கு” என்கிறார்.

“என் பார்வையிலயா?… இல்ல… உன் ஆக்‌ஷன்லதான் டிஃபரன்ஸ் தெரியுது , திடீர்னு மேல போய் படுத்துக்குற, திடீர்னு கீழ இறங்கிவற… திடீர்னு கத்துற…“ என்றார். ‘திடீர் திடீர்னு சாயுதாம், உடையுதாம்’ என்பதுபோல் இருந்தது விசித்திராவின் மாடுலேஷன்.

பிரதீப்
பிரதீப்Biggboss
பிக்பாஸ் Day 13
BIGG BOSS 7 | Day 12 | “ஆரியமாலா.. ஆரியமாலா.. ” வச்சு செஞ்ச பிக்பாஸ்; அதகளம் காட்டிய போட்டியாளர்கள்!

கூடவே,  கூல் சுரேஷை பார்த்து, “இந்த வீட்டில் டீ ஒண்ணு தான் ஸ்ட்ராங்கா இருக்கு” என்றவர், “ஆமா கூல் சுரேஷ், இந்த வீட்டுல எத்தன க்ரூப் இருக்கு?” என்று கேட்கிறார்.

“துப்பாக்கி க்ரூப் - ஏஜென்ட்ஸ் க்ரூப், இதை தவிற எங்க க்ரூப்..“ என்கிறார்.

“இதுல நான் ஏன் எந்த க்ரூப்லயும் இல்லாம தனியா இருக்கேன்?” என்று அப்பாவியாக  கேட்கிறார் விசித்திரா.

“ஏன்னா உங்கள யாரும் சேத்துக்கல” என்கிறார் பிரதீப். 

பிறகு அடுத்த வார கேப்டனுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒரு மனதாக ஐஷூ, ஜோவிகா, யுகேந்திரன் ஆகியோரை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் யுகேந்திரன் வெற்றி பெறுகிறார். அதனால் அடுத்த வார கேப்டனாக யுகேந்திரன் அறிவிக்கப்பட்டார்.

யுகேந்திரன் கேப்டன் என்றதும் மாயாவின் வயிற்றில் புளிகரைக்க ஆரம்பிக்கிறது. “என்ன யுகேந்திரன்தான் அடுத்த வார கேப்டனா?” என்ற மாயாவின் அதிர்ச்சியான அந்த பார்வை, அத்தனையையும் பற்ற வைக்கிறது. ஐஷூவிடம் “அவர் கேப்டனா வந்தா நம்மை தூக்கி உள்ள போட்டுருவாரு… ” என்கிறார். அந்த பயம் இருக்கட்டும் மாயா..!

யுகேந்திரன்
யுகேந்திரன் Biggboss

மாயா தன் பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எப்படியாவது யுகேந்திரனை கேப்டன் பதவியிலிருந்து இறக்கி விடவேண்டும் என்று நக்கீரர் போல் விக்ரமிடம் சென்று “உங்க கேம்ல தப்பு இருக்கு. டவரை மூன்று டீமுமே சரியாக அடுக்காத நிலையில் நீங்கள் யுகேந்திரன்தான் வெற்றி பெற்றதாக எவ்வாறு அறிவிக்க முடியும்?” என்று கேட்கிறார்.

இதற்கு பதில் தெரியாத தருமி புலவர் விக்ரம் ஓடிப்போய் பிக்பாஸ் உதவியை நாடுகிறார். “பிக்பாஸ் பிக்பாஸ்… நான் செய்தது சரியா தவறா?  என்று கேட்கிறார். இதற்கான பதிலை ஆண்டவர் வந்து சபையில் எல்லோர் முன்பும் சொல்கிறார்.

”கலைப்பதை விட அடுக்குவதுதான் கஷ்டம். அதில் மூவர் அடுக்கியதில் யுகேந்திரன் அடுக்கியது சரியாக இருந்ததால், அவர்தான் இந்த வார கேப்டன். கன்ஃபஷன் ரூமில் ரூல்ஸ் புக் இருக்கு... எடுத்து படியுங்கள் “ என்று தருமிக்காக பரிந்துரைத்த சிவனை போல் கமல் வந்து நக்கீரருக்கு புரியவைத்து, யுகேந்திரனை கேப்டனாக்குகிறார்.

அடுத்ததாக  விண்ணுவிடம் கேள்விக்கணை பாய்கிறது. “விஷ்ணு கடந்த வாரம் எப்படி போச்சு?” என்கிறார் கமல்.

“அத ஏன் கேக்கறீங்க எசமான்; வீட்டுக்குள்ள எனக்கு ஒரு மட்டு இல்ல, மரியாதை இல்ல... அதுவும் இந்த ஜோவிகா பொண்ணு என்னை பார்த்து, டேய் வாடா, டேய் போடா… இவனாடா இவன் ஒரு அண்ணண்டா…னு சொல்லுது! இப்படித்தான் எனக்கு நடக்குது எசமான்” என்கிறார்.

Vishnu Vijay
Vishnu VijayBiggBoss

“சரி, நீங்க கொஞ்சம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கோங்க.. நான் ஐஷூகிட்ட கேள்விகளை கேட்டுட்டு மறுபடி உங்ககிட்ட வர்றேன்” என்று கூறிய கமல், ஐஷூவிடம் “கிச்சனில் நடந்தது என்ன” என்கிறார்.

“நடந்தது, நடக்குறது, நடக்கப்போறது எல்லாத்துக்கும் காரணம் இந்த ஸ்மால் பாஸ்தான் சார். பவா சார் அவர் பாட்டுக்கு வீட்டுக்கு போய்விட்டார். அந்த இடத்தை நிரப்பதான் கிச்சனுக்கு ஆள் கேட்டோம்.

ஆனா… இந்த பிரதீப் இருக்காருல்ல சார், அவருதான் ஸ்மால் பாஸ் பேச்சை கேட்டுட்டு ஸ்டிரைக் பண்ணுவோம்னு சொன்னார். அதிலிருந்துதான் நாங்க எல்லாரும் ‘ஓ… இந்த ஐடியா நல்லா இருக்கு; இதையே ஃபாலோ பண்ணலாம்’னு பண்ணிணோம்“ என்று தற்காலிகமாக தனது வாதத்தை எடுத்துக்கூறி தனது இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.

பிக்பாஸ் Day 13
பிக்பாஸ்7: ”நெஞ்சு வலிக்கிது; ஒரு நாள்கூட என்னால் இனிமேல் இங்கிருக்க முடியாது” - வெளியேறினார் பவா!

ஜோவிகா எழுந்து, “சார்,  இவங்களுக்கு பிக்பாஸ் வீட்டை பெருக்குறது, டாய்லெட் கிளீனிங்... இதெல்லாம் கிடையாது. சமையல் ஒன்னுதான் செய்யணும். அதுக்கே இப்படி அலுத்துக்கறாங்க…” என்றார். இவர் சொல்லும் கருத்து சரி என்று கமலும் ஒத்துக்கொண்டார்.  நமக்கு தெரிஞ்சு ஜோவிகா கமலை மட்டும்தான் ‘சார்…’ என்று சொல்கிறார். மற்ற எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்.

ஜோவிகா
ஜோவிகா Biggboss

விஷ்ணு எழுந்து விசித்திராவை குறை சொல்கிறார். “சார் இந்த விசித்திரா அம்மா ரொம்ப மோசம், பாவம் போனா போகுதுன்னு நான் இவங்களுக்கு சமைச்சு கொடுத்தா, ‘அது சரியில்ல, இது சரியில்ல, காரம் கம்மி, உப்பு நிறைய…’னு அவ்ளோ சொல்றாங்க. இப்படி சொல்றதோட நிக்காம, பருப்பு எவ்வளவு இருக்கு, அரிசி எவ்வளவு இருக்குன்னு.. இதென்ன இவங்க வீட்டு கிச்சன் கணக்கா வந்து இன்பெக்‌ஷன் பண்ண?… “ என்று ஸ்கூல் முடிந்ததும் அம்மாவை பார்த்த குழந்தைப்போல மம்மி… என்று அழாதகுறை தான். விசித்திரா மைண்ட் வாய்ஸ்… ‘என்னையா போட்டுக்கொடுக்குற..... விஷ்ணு, உனக்கு இருக்கு…’ என்பதுபோல பார்வை ஒன்றை விஷ்ணு மீது வீசினார்.

விசித்திரா
விசித்திரா Biggboss

விஷ்ணு அத்தோடு நிறுத்தாமல், “இந்த பிரதீப் இருக்கான்ல சார், பிரதீப்... அவன் தினமும் பால பொங்கவிட்டுட்டு அடுப்ப நாஸ்தி பண்ணிடறான். பால் காய்ச்ச ஒரு பாத்திரம், காப்பி போட ஒரு பாத்திரம், டீ போட ஒரு பாத்திரம், இஞ்சி டீ போட ஒரு பாத்திரம்னு, பாத்திரம் பாத்திரமா எடுத்து யூஸ் பண்ணி மொத்தத்தையும் தேய்க்க போட்டுறார். பாத்திரம் பாத்திரமா தேய்ச்சு என் கை தேய்ஞ்சு போச்சு, பாருங்க ரேகை கூட தெரியல..” என்று கமலிடம் பரிதாபமாக கையை காட்டுகிறார்.

”சரி இதெல்லாம் இருக்கட்டும் ஸ்டிரைக் செய்த சமயம் யாரெல்லாம் food-ஐ எடுத்து ஒளிச்சு வச்சு சாப்டீங்க?” என்று கமல் கேட்டதும், குடோனிலிருந்து ஒவ்வொரு கண்ணிவெடியா வெளியில் வருது.

கூல் சுரேஷ்
கூல் சுரேஷ்Bigg Boss

ஐஷு, “நான் ஆப்பிள் எடுத்து வைத்துக்கொண்டேன்” என்றதும், “அந்த ஆப்பிள்னாலதானே இத்தனை பிரச்னையும்” என்று சரியாக அம்பெய்கிறார் கமல். கூல் சுரேஷ், “சார் நான் 18 முட்டை” என்றார்.

விஷ்ணு “சார் ஒரு பை நிறைய பழம்” என்றார். பத்தாதற்கு மாயாவும், ஐஷூம் பிரட், சீஸ் என்று பதுக்கிகொண்டனர்.

Vishnu vijay
Vishnu vijayBigg Boss

ஆக ஐய்யோ பாவம் எல்லோரும் பட்னி கிடக்கிறாங்க என்று நாம் நினைத்ததை பொய்யாக்கி இருக்கின்றனர் ஸ்மால் பாஸ் வீட்டினர். இனி என்னெல்லாம் நடக்க இருக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com