BIGG BOSS 7 | Day 12 | “ஆரியமாலா.. ஆரியமாலா.. ” வச்சு செஞ்ச பிக்பாஸ்; அதகளம் காட்டிய போட்டியாளர்கள்!

நேற்று எபிசோடில் ஒரு டாஸ்க் வச்சாங்க பாருங்க... அதுதான் உண்மையிலேயே உருப்படியான டாஸ்க்! ஐந்து நிமிடத்திற்கு மேல தங்க முடியாத ஒரு ரூமில் ஒரே பாட்டை மறுபடி மறுபடி கேட்கவேண்டும் என்பதுதான் அது.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7PT

பிக்பாஸில் 12-ம் நாளான நேற்று,

விசித்திராவையும் யுகேந்திரனையும் கம்பேர் பண்ணி ஐஷூ மாயாவிடம் பேசும் பொழுது, “தினமும் காலை யுகேந்திரன் சார் வந்து ஹாய் சொல்லுவார். ஆனால் இன்னைக்கு காணோம். இந்த விஷயத்துல சுசித்திரா அம்மா எவ்வளவோ மேல்... அவங்க மனசுல எதையும் வச்சுக்க மாட்டாங்க... நேந்து நடந்ததே அவங்களுக்கு நியாபகம் இருக்காது. ஆனா யுகேந்திரன் சார் அப்படி இல்லை” என்றவர்,

“நேத்து மணிகிட்ட, ‘ரவீனா மேல உனக்கு லவ் இருந்திருந்தா நீ எங்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கனும். நீ சொல்லாதது தப்பு...’ அப்படின்னேன். அதுக்கு ரவீனா எங்கிட்ட, ‘நா எதுக்குடீ சொல்லலனும்’னு கேட்டா.. ‘யம்மா, உனக்கு இந்த மணிய இப்பதான் தெரியும். ஆனா எனக்கு அவன ஆறு வருசமா தெரியும்’னு சொன்னேன். அப்படியே கோச்சுக்கிட்டு போய்ட்டா... அது தப்பில்ல...” என்று மாயாவிடம் ரகசியமாக சொல்கிறார். அப்படியே ஷாக்காகிட்டேன் மொமண்ட் நமக்கு!

இத்தோட நிறுத்தினாங்களா... அதுதான் இல்லை...! மணிச்சந்திரனுக்கும் ஐஷூக்கும் ஐந்து வருடமாக நட்பு இருக்கிறது என்றும், ‘இங்க அவன் குணம் வேறு வெளியில் வேறு...’ என்றும் ஐஷூ வெள்ளந்தியா மாயாவிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். ஏற்கெனவே மாயா எல்லார் சண்டையிலும் மூக்கை நுழைக்கிற ஆளு. இதுல ஐஷூ வேற தன் பங்குக்கு மணியை பத்தி சொல்லவும், கேட்கவா வேணும் மாயாவுக்கு அல்வா சாப்பிட்டமாதிரி ஆயிருக்கும். இது எங்க போய் முடியப்போகுதோ...!

இங்க... நம்ம விச்சும்மா கேமரா முன்னாடி நின்னு, “எல்லாரும் என்ன? ஒரு மாதிரி நடந்துக்கிறாங்க ... அம்மா, அம்மா...ன்னு வந்து குழையுறாங்க... ஆனா ஒருத்தன் மனசுலேயும் என்னை அம்மான்னு நினைக்கல... இதுல பூர்ணிமாக்கு என்ன என்மேல சிம்பத்தி... இவதான் இங்க சொல்றத அங்க சொல்லிட்டு, அங்க சொல்றத இங்க சொல்லிட்டு திரியறா.. முதல்ல இவள தூக்கணும், இல்ல இவ கலரை தெரியவைக்கணும். எனக்கும் மெண்டல் ஸ்ரென்த் இருக்குன்னு காட்டனும்” என்று அவருக்குள் இருக்கும் சந்திரமுகியை அப்பப்போ வெளிக்கொண்டு வருகிறார்.

அத்துடன் நிற்காமல் கிச்சன் ஹோல் வழியா தலையை உள்ளே நுழைத்து மாயாவை எச்சரிக்கிறார்.

“இங்க வா.. நான் உன்கிட்ட பேசணும். என்னமோ நேத்துநான் உன் கல்யாண மேட்டரை ஹேட் பண்ணிட்டேன்னு எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருக்க...”

“நீங்க சொன்னது தப்புதான். ஆனா அத நான் பர்சனலா எடுத்துக்கல”

“நீ பர்சனலாவே எடுத்துக்கோ... நீ ஆரம்பத்திலேர்ந்து எல்லோரிடத்திலும் ஹுமர்சென்ஸாக பேசறது, எல்லாரையும் நக்கலா பேசறது, நய்யாண்டி பண்றதுனு இருக்க. அதெல்லாம் எனக்கு தெரியும். நான் இன்னொன்னும் சொல்றேன் கேட்டுக்கோ... உன்ன நானும் நாமினேட் பண்னினேன் தெரியுமா?” என்று வடிவேலுக்கு கோபம் வந்த மாதிரி சொல்லவும்,

“தெரியும்... நான் எல்லார்கிட்டையும் கோள்சொல்றேன்னுதானே...”

“அதுக்காக இல்ல... அந்த காரணத்த நான் இப்போ சொல்ல மாட்டேன். ஆனால் உன் ஏனென்ஸ்ல ஒரு ஆளு உனக்கு எதிரா இருக்காங்க..”

“நீங்க இப்படி சொல்லி எங்கிட்ட கேம் விளையாடுறீங்க” என்று மாயா கேட்க...

“நான் ஹானஸ்ட்டா சொல்றேன். அது யாருன்னு உனக்கு தெரியாது” என்று மாயாவை குழப்பிவிட்டு செல்கிறார் விசித்திரா...

அடுத்த ஒரு டாஸ்க் பிக்பாஸ் தருகிறார். களிமண் நிரம்பி இருக்கும் இடத்தின் நடுவில் ஒரு பலகை இருக்கும். அதில் சைக்கிள் ஓட்டவேண்டும்.

இதில் வினுஷா தோற்றுவிடுகிறார். அதனால் எல்லொரும் போட்டிருக்கும் உடையிலேயே இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறிவிடுகிறார்.

மதியம் சாப்பிட்டு முடித்து ரிலாக்ஸாக உட்கார்ந்து பூர்ணிமாவும், மாயாவும் தனியாக எப்பொழுதும் போல வம்பு பேச தொடங்கினர். பூர்ணிமா “அனேகமா நான் வெளியே போய்டுவேன்” என்கிறார்.

இதற்கு, உண்மையான தோழி என்றால் என்ன சொல்லி இருக்கவேண்டும்? அதெல்லாம் போகமாட்டாய், என்று தைரியபடுத்துவதுதானே நல்ல தோழிக்கு எடுத்துக்காட்டு? ஆனால் மாயாவோ... “நீ போய்விட்டால், நானும் எப்படி சும்மா உட்காந்திருப்பேன்? அவங்களே என்னையும் அனுப்பிடுவாங்க” என்கிறார். இது என்ன உரையாடல் யுவரானர்?

இதெல்லாம் ஒரு கண்டண்டே இல்ல... அடுத்தது ஒரு டாஸ்க் வச்சாங்க பாருங்க... அதுதான் உண்மையிலேயே உருப்படியான டாஸ்க்! ஐந்து நிமிடத்திற்கு மேல தங்க முடியாத ஒரு ரூமில் ஒரே பாட்டை மறுபடி மறுபடி கேட்கவேண்டும் என்பதுதான் அது. இந்த டாஸ்க்கில் தோற்றால் பிக்பாஸில் இருப்பவர்களுக்கு உணவு கிடையாது என்றதும், அனைவருக்கும் “ஐயையோ...” என்று இருக்கிறது.

இதற்கு ரவீனா, யுகேந்திரன், சுசித்திரா மூவரும் தேர்வாகி ரூமிற்கு செல்கிறார்கள். அங்கு தூங்க கூடாது என்பது மட்டும்தான் நிபந்தனை. பாட்டு ஆரம்பித்தது 1941ல் வெளிவந்த ஆரியமாலா படத்திலிருந்து “ஆரியமாலா... ஆரியமாலா..” என்ற பாட்டை திரும்ப திரும்ப ஒலிக்க வைத்தார்கள். மூவருக்கும் பைத்தியம் பிடிக்காத குறைதான். ஆனால் டாஸ்க் அல்லவா.. விளையாண்டு தானே ஆகவேண்டும்.

“ஆரியமாலா... ஆரியமாலா... ஆரியமாலா... ஆரியமாலா...” இந்த வரிகள் தேய்ந்து போன ரெக்காடர் மாதிரி மறுபடி மறுபடி ஒலிக்க வைத்து.... அனேகமா, பிக்பாஸ் இதை ப்ளே செய்துவிட்டு வெளியில் சென்றிருக்க வேண்டும். அப்படி ஒரு பாட்டு. ஆனாலும் இது சாப்பாட்டு பிரச்சனை அல்லவா? வெற்றி பெற்றுதானே ஆகவேண்டும்.! அதனால் இதில் முவருமே பொறுமை காத்து வெற்றி பெற்று பிக்பாஸ் வீட்டிற்கு பெருமை சேர்த்தார்கள்.

அடுத்து என்ன என்பதை நாளை பார்க்கலாம். அதுவரை... “ஆரியமாலா... ஆரியமாலா... ஆரியமாலா... ஆரியமாலா...”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com