பிக்பாஸ் 7- Day 67: “சொருகிடுவேன்” .. விசித்திராவிலிருந்து ஆரம்பித்து நிக்சனில் முடிந்த பிரச்சனை!

“இது சும்மா ஸ்சாம்பிளுக்கு தான் சொன்னேன். உண்மையிலேயே உங்களை பற்றி பேச என்கிட்ட நிறைய விஷயம் இருக்கு” அர்ச்சனா.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டிவி

பிக்பாஸ் 67 வது நாள்

பொம்மலாட்டம் டாஸ்கில் தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்த விசித்திரா ஒவ்வொருவரிடமும் “ஏன் இப்படி பேசினீங்கனு...” கேட்க, பூர்ணிமாவும் நிக்சனும் “இது சும்மா ஃபன்” என்று எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். அர்ச்சனாவிடம் வாயைக்கொடுத்தா தான் வாங்கிக்கட்டிக்கொள்வோம் என்று நினைத்த விசித்திரா, அவரிடம் மட்டும் பட்டும் படாமலும் கேட்கிறார். அதற்கு அர்ச்சனா, “இது சும்மா ஸ்சாம்பிளுக்கு தான் சொன்னேன். உண்மையிலேயே உங்களை பற்றி பேச என்கிட்ட நிறைய விஷயம் இருக்கு” என்று மூக்கை உடைக்கிறார்.

கூல் சுரேஷிடம் சென்று டாஸ்கில் என்னை பற்றி ஏன் இப்படி பேசினீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கூல் சுரேஷ் கூலாக, “அட போம்மா...” என்ற பார்வையை வீசிவிட்டு கடந்து சென்று விடுகிறார். இன்னும் விஷ்ணுவும், மாயாவும் தான் பாக்கி, முதல்ல விஷ்ணுகிட்ட பேசலாம்னு நினைச்சு, “விஷ்ணு பொம்மலாட்டம் டாஸ்கில் எல்லாரும் என்னை தரக்குறைவாக பேச கேப்டனான நீ அதை தட்டி கேட்காமல், ஒரு பக்கமாக சப்போர்ட் பண்ற “ என்கிறார்.

பிக்பாஸ் 7
BiggBoss 7: விஷ்ணுவின் கேப்டன்சி வெற்றி பெறுமா? பூர்ணிமாவுக்கும் கேப்டனுக்கும் மோதல் ஏன்?

சும்மா இருப்பாரா விஷ்ணு, அவர் ரெண்டு சொல்ல... இவர் ரெண்டு சொல்ல... வார்த்தை தடித்து சண்டை ஆரம்பமாகிறது. விஷ்ணு கோபத்தில் ”நீங்க தான் இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியே போவீங்க” என்று சொல்லவும்,

“அப்படியா... நான் போவேனா, பாக்கலாம்..... அப்படியே போனா உன்னை பார்த்துட்டு உன்னை ஹக் பண்ணிட்டு போறேன்” என்று சொல்லிட்டு போகிறார். விசித்திராவை வெளியேற்ற வேண்டும் என்று விஷ்ணுக்கு மட்டுமல்ல வீட்டிலிருக்கும் எல்லா போட்டியாளருக்கும் இருக்கும் ஒரு எண்ணம். இப்படி ஒவ்வோருத்தரும் தங்களுக்குள் உள்குத்து குத்திக் கொண்டிருக்கின்றனர்.

கோபம் குறையாத விசித்திரா மறுநாள் மறுபடி விஷ்ணுவிடம் மோதுகிறார். “இந்த டாஸ்கில் எல்லோருக்கும் மனித தன்மை போய் ஏன் மிருகத்தன்மை வருதுன்னு புரியல...” என்கிறார்.

“எல்லாருமே அப்படித்தான் விளையாடுறாங்க யார்கிட்டையும் fun இல்ல” என்கிறார்.

விஜய் டிவி

”நிக்சன் கேப்டன்சிய சரியா தான் செய்தான். உனக்கு அவன் தேவலை “ என்று விஷ்ணுவை ட்ரிக்கர் செய்வது போல் சொல்லவும், விஷ்ணுவும், “நீங்க டாஸ்க் ஏதும் செய்யாம எனக்கு இது சரியாவராது, அது சரியா வராதுனு சொல்றீங்க... உங்களுக்கு வயசாச்சுன்னு பீல் பண்றீங்க. உங்க வயசுக்கு தகுந்தமாதிரி கேம பிக்பாஸுகிட்ட கேளுங்க” என்று விஷ்ணு சொல்லி செல்லவும்,

விசித்திராவுக்கு இது ஈகோ பிரச்னையாக படுகிறது, ”ஏஜ் ஆனாலும், என்னால டாஸ்க செய்யமுடியும்” என்று நிரூபிப்பதற்காக, சைக்கிள் மிதிக்க எனக்கு வோட் பண்ணுங்க; நான் சைக்கிள் மிதிப்பேன்” என்று எல்லோரிடமும் சென்று சப்போர்ட் கேட்கிறார்.

இதனிடையே விஷ்ணு நிக்சனிடம், “என் கேப்டன்சி நல்லாதானே போய்ட்டு இருக்கு? ஏன் நா சொல்றத யாரும் கேட்கமாட்டேங்கறாங்க?” என்று பரிதாபமாக தான் கேட்கிறார்.

விஜய் டிவி

நிக்சனும், ”ஏன்னா நீங்க யாரையும் இது செய், அது செய் என்று ஆடர் கொடுக்கமாட்டேங்கறீங்க; அதனால யாரும் நீங்க சொல்றத கேட்கறது இல்ல... அதவிட நீங்க இந்த கேள்விய என்கிட்ட ஒரு 100 தடவையாவது கேட்டு இருக்கீங்க. எனக்கு போர் அடிக்குது” என்று சொல்லவும் இருவருக்குள்ளும் பிரச்னை. இவர்கள் பிரச்னையை வேடிக்கை பார்க்க அங்க வந்து அமர்கிறார் அர்ச்சனா.

விஷ்ணு நிக்சனின் பழைய மேட்டரை கிளருகிறார். இதைபார்த்த அர்ச்சனா, நிக்சனை வெறுப்பேத்த கையை தட்டுகிறார். இதில் வெறுப்பான நிக்சனுக்கும், அர்ச்சனாவுக்கும் பெரிய பிரச்சனை ஆரம்பிக்கிறது. வினுஷாவைப்பற்றி நிக்சன் பேசியதையும், ஐஷு வெளியே போனதுக்கு காரணம் நிக்சன் தான் என்று சொன்னதும், நிக்சனுக்கு அவமானமாக போனது, அவர் தன்னிலை மறந்து கத்த ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அர்ச்சனாவை பார்த்து, “சொருகிடுவேன்” என்ற வார்த்தையையும் விடுகிறார். மற்ற போட்டியாளர்கள் நிக்சனை சமாதானப்படுத்த... இங்கு மணியும், ரவீனாவும் எரியும் நெருப்பில் எண்ணையை விடுவது போல, அர்ச்சனாவிடம் வந்து, “நிக்சன் உன்னை பார்த்து சொருகிடுவேன்னு சொன்னத பார்த்தா எனக்கே பயமா இருக்கு” என்று கூறுகிறார்.

இப்படி விசித்திராவில் ஆரம்பித்த பிரச்சனை நிக்சனில் முடிந்தது பிக்பாஸில் 67 ம் நாள் வீடு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com