BiggBoss 7: விஷ்ணுவின் கேப்டன்சி வெற்றி பெறுமா? பூர்ணிமாவுக்கும் கேப்டனுக்கும் மோதல் ஏன்?

”ல்ல… நீ மட்டும் தான் எனக்கு உண்மையான ப்ரண்டு; நீயே இப்படி பேசினால் நான் என்ன செய்வேன்?” என்று அழாதகுறையாக விஷ்ணு புலம்புகிறார்
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7vijay tv

பிக்பாஸ் 64 வது நாள்

இந்த வார கேப்டனாக விஷ்ணு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்படி பிக்பாஸ் ரூல் பிரேகிங் விதிமீறலுக்கு கிராஸ் ஸ்டிக்கர், பயஸ்டாக இருந்தால் கிராஸ் பட்டன் கொடுத்து மணியை அடிக்கலாம், எண்டெர்டைண்மெண்ட் இது குறைந்தால், கேப்டனுக்கு கிராஸ் கொடுக்கப்படும். இப்படி கேப்டன் 3 கிராஸை வாங்கினால் அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, வேறொருவர் கேப்டனாக நியமிக்கப்படுவர் என்ற ரூலை பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

பிறகு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு 6 பேரை கேப்டன் தேர்வு செய்தார். அதன்படி விஜய், அனன்யா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம், ரவீனா ஆகியோரை ஸ்மால்பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதில் பூர்ணிமாவுக்கு மீண்டும் வருத்தம்.விஷ்ணு தன்னை வேண்டுமென்றே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினார் என்று பூர்ணிமா மாயாவிடம் வருத்தப்படுகிறார்.

இதைக்கண்ட விஷ்ணு, “பூர்ணிமா நீ என்னை தப்பா நினைச்சுட்ட.. நா அப்படி இல்ல… நீ மட்டும் தான் எனக்கு உன்மையான ப்ரண்டு நீயே இப்படி பேசினால் நான் என்ன செய்வேன்?” என்று அழாதகுறையாக விஷ்ணு புலம்புகிறார்.

அடுத்ததாக ஸ்மால் பாஸ் வீட்டில் அடுப்பு எரிய வேண்டுமென்றால், பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் சைக்கிள் மிதிக்கவேண்டும் என்ற ஒரு டாஸ்கை கொடுக்கவும், சைக்கிளை மிதிக்க தினேஷூம், கூல்சுரேஷும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாம் எதிர்பார்த்தபடி கூல் சுரேஷ் கழுவுற மீன்ல நழுவுற மீன் போல் சைக்கிளை சரியாக பெடல் செய்யாமல் கால் வலிக்கிறது என்று சொல்லவும், மாற்று ஆளை தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று பிக்பாஸ் கூறினார். அதன்படி ரவீனாவும், தினேஷூம் சைக்கிள் ஓட்டினர்.

vijay tv

அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் இதில் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து நிக்சன் தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து விசித்திரா, தினேஷ், அர்ச்சனா, மணி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் வந்தனர்.

அடுத்ததாக் க்ளீனிங் டாஸ்க் நடந்தது. இதில் ஸ்மால் பாஸ் வீட்டினர் வெற்றிபெற்று கிளீனிங் பொருப்பை பிக்பாஸ் வீட்டினருக்கே கொடுத்தனர். இதன் நடுவில் நிறைய பிரச்சனைகள் சண்டைகளுக்கிடையே இன்றைய பொழுதை பிக்பாச்வீட்டினர் கழித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com