ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கமல் வரும் நாட்கள் தான். இந்த வாரமும் கம்பீரமாக வந்த கமல், முன்னேற்றம் குறித்து ஒரு கருத்தை சொன்னார். ”நாம் முன்னேறும் பொழுது திரும்பி நின்று அடுத்தவர்கள் முன்னேற்றத்தை தடுப்பதினால், நாம் முன்னேறாமல் அதே இடத்தில் தான் நிற்கிறோம்” என்கிறார். இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது கமல் அதிருப்தி கொண்டிருக்கிறார் என்பது அவரின் பேச்சில் தெரிகிறது. ”புகழ்ச்சி தனக்கு, வஞ்சகம் பிறருக்கு என்று தான் பிக்பாஸ் போட்டியாளார்கள் செயல்பட்டுட்டு இருக்காங்க… என்கிறார்.
ஆரம்பத்தில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த அர்ச்சனா, தற்பொழுது மாறாக வெறுப்பை சம்பாதித்து வருகிறார். ஸ்மால் பாஸில் விக்ரமிடம் டீ க்கு ஒரு சண்டை வளர்த்தார் பாருங்க… இப்படியெல்லாம் கூட சண்டை வலுக்க முடியுமா? என்றே நமக்கு தோன்றியது. அப்படி ஒரு அராஜகம், பாவம் விக்ரம் எதுவுமே பிரச்சனை செய்யாமல் இருந்துவிட்டார். இவருக்கு மாயா எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
பிறகு இடைவேளைக்கு பிறகு வந்த கமல் நிக்சனின் கேப்டன்சி பத்தி கேட்கவும், அனைவரும் பொதுவாக ”நன்றாக இருந்தது; அவர் வயிர் நிறைய சாப்பாடு போட்டார்” என்றனர். பசியில் கிடக்கும் ஒருவனால்தான் அடுத்தவரின் பசி என்ன என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். அதனாலேயே நிக்சன் இந்த விஷயத்தில் கவனமாக இருந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
பிறகு அந்த வாரம் நடந்து முடிந்த கயிறு டாஸ்கை பற்றி கேட்கிறார் கமல். ஒருவர் கூட தன்னுடன் இருந்தவர் தனக்கு அனுசரித்து போனதாக சொல்லவில்லை. இதில் கூல் சுரேஷூம், விசித்திராவும் கையில் கயிறு கட்டி இருப்பார்கள். கூல் சுரேஷ் விசித்திராவைப் பற்றி மற்றவர்களிடம் இந்த அம்மா என்னை தரதரன்னு இழுத்துட்டு போகுது... என்று குறை சொல்லி விசித்திராவின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்கிறார்.
தரம் தாழ்ந்த வார்த்தைகளை குறைத்துக்கொள்ளுமாறு அர்ச்சனாவுக்கு கமல் அறிவுறுத்தி, குப்பைத்தொட்டியை எடுத்து காட்டியதை கூறினார். ஆனால் அதை அழுத்தி கூற அவரால் இயலவில்லை. ஏனெனில் கமலுக்கு எதிராக போர்கொடி தூக்கவும், அவர் எதற்கு வாய்விடுவார் அவரை எப்படி வறுத்தெடுக்கலாம் என்று சமூக வலை தளங்கள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு காத்திருப்பது கமலுக்கு தெரிந்தது தான். அதனாலே என்னவோ அவர் யாரையும் எதுவும் சொல்வதில்லை.
இத்துடன் அன்றைய எபிசோடை முடித்துக்கொண்டு அவர் கிளம்பினார்.
கமல் வந்ததும் பிக்பாஸ் வீட்டினரின் திட்டத்தை பற்றி நம்மிடம் ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்.
”வாராவாரம் இவர்கள் ஒருவர்களுக்குள் ஒருவர் சண்டைப் போட்டுக்கொள்வது பிறகு வார இறுதியில் ஒருவர்களுக்குள் ஒருவர் சாரி சொல்லிக்கொண்டு தனிந்த குரலில் என்னுடன் பேசுவது… இவர்களுக்கு இன்னும் எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை, இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்கிறது “ என்று சொல்லும் பொழுது அவர்களே குண்டை வைப்பாங்களாம் அப்புறம் எடுப்பாங்களாம் என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.
அகம் டீவி வழியே அகத்திற்குள் கமல் சென்றதும், அனைவரும் எழுந்து நிற்கின்றனர். வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அனன்யா மற்றும், விஜய் தொடர்ந்து இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை , stay back, go back மூலம் சொல்லுமாறு சொல்லவும், அனன்யா 6 வோட்டும், விஜய் 6 வோட்டும் வாங்கி பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தனர்.
இதில் விசித்திரா கமலிடம், “விஷ்ணுக்கு நான் ஏன் கோபேக் கொடுத்தேன் என்றால் அவர் வெளியில் மக்கள் என்னை பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை சரியாக சொல்லவில்லை. எனது ப்ளஸை மைனஸாக்கி அவர் விளையாட நினைக்கிறார்” என்கிறார்.
இதற்கு விளக்கம் கொடுத்த விஜய், ”இந்த வீட்டில் இருப்பவர்கள் சண்டை போட்டா மட்டும் தான் மக்கள் பேசுவாங்கன்னு நினைக்கிறாங்க. அது இல்லை என்பது எனக்கு தெரியும். வெளியில் இவர்களை பற்றி மக்கள் கூறுவதை அப்படியே இங்கே வந்து சொன்னால் ஓ… இது தானா என்று இவர்கள் சுதாரித்துக்கொண்டு விளையாடி விடுவார்கள் . நான் எனக்கு கிடைத்த இந்த இரண்டாம் வாய்ப்பை கவனமாக விளையாட நினைக்கிறேன்.” என்று அவர் கூறியதை கேட்ட கமலே சிரிக்கிறார்.
அனன்யா அவரைப்பற்றி கூறிம் பொழுது ”நான் சண்டை போடனும் என நினைத்து போடமாட்டேன். அதே மாதிரி இந்த வீட்டில் எனக்கு யாரும் சப்போர்ட் செய்யமாட்டாங்கன்னு எனக்கு தெரியும். இங்கு எனக்கு யாரோடையும் கம்பர்டபிள் கிடைக்கவில்லை. .” என்கிறார்.
பிறகு இந்தவார நாமினேசனில் ஜோவிகா வெளியேறினார்.
புத்தக பரிந்துரை..
இன்று கமல் பரிந்துரைத்தது இசை அவர்களின் கவிதைகளை. இசையின் இயற்பெயர் சத்தியமூர்த்தி. இவர் கவிதைகளில் உறவு, அரசியல் நையாண்டி என்று அத்தனை ஜானர் இடம்பெற்றிருந்தாலும், இவர் அதை சொல்லும் முறை எதார்த்தமாக இருக்கும் என்கிறார்.
பிறகு ஜோவிகாவுடன் பேசி அவரை வழியனுப்பி வைத்ததுடன் இனி அடுத்த வாரம் சந்திக்கலாம் என்று சொல்லி அவரும் கிளம்புகிறார். நாமும் இதை முடித்துக்கொண்டு நாளை என்ன நடக்கிறது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.