பிக்பாஸ் 7: ’நீங்க கண்டிஷனை சரியா படிக்கல’.. டாஸ்கை நினைவில் வைத்து கமல் சூசகமாக சொன்ன ஒரு செய்தி!

டாஸ்க் முடிவதற்குள் நாம் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்த ஐஷூ, கூல் சுரேஷ், ஜோவிகா, நிக்ஸன் ஆகியோர் அவசர அவசரமாக தங்களின் மதிய உணவை முடித்துக்கொண்டனர்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7vijay tv

பிக்பாஸில் 20ம் நாளான நேற்று, சாப்பாட்டு சண்டை ஒன்றும் நடந்தது, தவிரவும் நேற்று நடந்த டாஸ்கை நினைவில் வைத்து கமல் சூசகமாக ஒரு செய்தியை கூறி இருக்கிறார். அது என்ன 

நேற்று நடந்த ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்கில், இருவர் வெற்றி பெறவேண்டும், இல்லையென்றால் பிக்பாஸ் வீட்டில் சமைத்த எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என்ற டாஸ்கில் மணி, யுகேந்திரன், ரவீனா விளையாடினர். இந்த கஷ்டமான டாஸ்கில் இவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்று நினைத்த பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலர், டாஸ்க் முடிவதற்குள் நாம் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்த ஐஷூ, கூல் சுரேஷ், ஜோவிகா, நிக்ஸன் ஆகியோர் அவசர அவசரமாக தங்களின் மதிய உணவை முடித்துக்கொண்டனர். அதன் பின்னால் வந்தவர்களுக்கும், விளையாடி முடித்து வந்தவர்களுக்கும் விதிமுறையை அமல் படுத்தினார் பிக்பாஸ் ஆகையால், பிக்பாஸ் வீட்டிலிருந்த சிலர் பட்டினி கிடந்தனர். இதை கண்ட் மாயாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பாட்டுப்பாடிய் படி பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களை வெறுப்பேத்தினார்.

NGMPC22 - 147

யுகேந்திரனும் பதிலுக்கு ஸ்மால் வீட்டிலிருப்பவர்களை பழிக்கு பழி வாங்க நினைத்தார். ஆகையால் சமையல் பொருட்கள் அனைத்தையும் பிக்பாஸ் வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகின்றனர்.

சிறிது நேரம் பிக்பாஸ் வீட்டினர் எதையும் சாப்பிடாமல் பட்னி கிடந்ததும் பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதன்படி, நீங்க என்னுடைய கண்டிஷனை நீங்க சரியா படிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் சமைத்ததைதான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே தவிர.. நீங்க பட்னி கிடக்கனும்னு சொல்லலை.. என்றவர் பிக்பாஸ் வீட்டினருக்காக உணவு தட்டை கொடுத்தார். இதைக்கண்ட ஸ்மால் பாஸ் வீட்டினர் இதெல்லாம் அநியாயம் பிக்பாஸே ரூல்ஸை மீறுகிறாரே.. என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

NGMPC22 - 147

மாயா காபி போடுவதற்காக தயாரான பொழுது யுகேந்திரன் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யாரும் என்னை கேட்காமல் அடுப்பு பற்றவைக்கக் கூடாது, இங்கிருந்து பால் சக்கரை ஏதும் வராது என்று இவர் பங்கிற்கு சொல்லவும், ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்தவர்கள் கடுப்பானார்கள். இப்படி இரு வீட்டாரும் செத்து செத்து விளையாடினர். இறுதியாக யுகேந்திரன் இதெல்லாம் சும்மா.. விளையாட்டுக்கு தான் என்று கூறுகிறார்.

இன்று ஸ்டிரைக்கார்டு பெறபோவது பிரதீபா? விஜயா? நிக்சனா?

பிக்பாஸ் 7
பிக்பாஸ்7 Day20: ’இது விளையாட்டு; சிலர் முதுகில் குத்தத்தான் செய்வார்கள்’ வினுஷாவிற்கு நடந்தது என்ன?

தவிரவும் இன்று வெளிவந்த ப்ரோமோவில் கமல்ஹாசன், யாரெல்லாம், புத்தியை வச்சு, விளையாண்டார்கள் யரெல்லாம் சக்தியை வைத்து விளையாண்டார்கள் இவர்கள் யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்பதை இன்று இரவு பார்க்கலாம் என்று ஒரு சஸ்பென்ஸுடன் சொன்னாலும், அனேகமா ஸ்டிரைக் கார்டு பெறப்போவது மறுபடியும் விஜய் தான் என்கிறார்கள் இணையதள ரசிகர்கள். சிலர் பிரதீப் என்கின்றனர். சிலர் கண்ணாடி உடைத்ததற்காக நிக்சனுக்கு தரப்படும் என்கின்றனர். இதன் நடுவில் இன்று வெளியான ப்ரமோ 2ல் நிக்ஸன், ”ஆக்ஸிஜன் சிலிண்டர் டாஸ்கில் யுகேந்திரன் அவர் எடுத்த பாட்டில்களை பிக்பாஸ் வீட்டிலிருப்பவருக்கு தருவதாக சொன்னார்” என்று கூறியது அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது. பொருத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com