BIGG BOSS DAY 11 | “ஆள் பத்தல, அதனால சமைக்க மாட்டோம்” - ஸ்மால் பாஸ் வீட்டினர் ஸ்ட்ரைக்! விளைவு என்ன?

பிரதீப்... என்ன ஆச்சு உங்களுக்கு? கண்டண்ட் கிடைக்கலைனா இப்படியா பண்றது என்பதுபோல இருந்தது நேற்று எபிசோட்!
பிக்பாஸ்
பிக்பாஸ்PT

பிக் பாஸ் 11ம் நாளான நேற்று, மணிச்சந்திரனும் ரவீனாவும் மாயாவை பற்றி பேசி பிரச்னைகளை தொடங்கி வைத்தனர். "மாயா கலாய்கும்போது, நீ சரியா அவளுக்கு பதிலடி கொடுத்துடற... என்கிட்டயும் ஒருதடவ வாய் கொடுத்தா. நான் சரியா பதிலடி தந்தேன். அதிலருந்து என்பக்கமே வரமாட்டா” என்று மணி ரவீனாவிடம் சொல்கிறார்.

ரவீனா
ரவீனா

இவர்கள் பேச்சை கேட்க விசித்திரா அங்கு வர, மூவரும் பேசத்தொடங்கினர். “மாயா அடுத்தவங்களை ரொம்ப டவுன் பண்ணிவிடுவா” என்றார் விசித்திரா. தொடர்ந்து, “சரி நீங்க ரெண்டுபேரும் லவ்வர்ஸா?” என்று விசித்திரா கேட்க.. “நாங்க கப்புள்ஸ் இல்லை, ப்ரண்ட்ஸ்” என்று மணி விசித்திராவிடம் சொல்கிறார்.

கட் பண்ணா.. போரிங் என்று வழக்கு போடப்பட்ட வினுஷா, அக்‌ஷயா இருவரையும் அழைத்த பிக்பாஸ், ”நீங்க மக்கள் எண்டர்டைனாக இருக்குற மாதிரி என்ன செஞ்சீங்க?” என்று கேட்கிறார். வினுஷா, “நான் கிச்சன் டீமீல் பாட்டு பாடி இருக்கேன்” என்றார்.

அக்‌ஷயா அவரின் பங்கிற்கு “யான் ஒரு மளையாள பாட்டு பாடி சொல்லி கொடுத்தும் இருக்கேன். அப்புறம் ஏஜெண்ட்ன்னு ஒரு டீம் நாங்க கிரியேட் பண்ணி எல்லோரையும் எண்டர்டெயின் பண்ணியிருக்கேன்” என்றார்.

மக்களே நீங்க ஏதாவது ஏஜெண்ட் டீமின் எண்டர்டெயிண்மெண்ட் பாத்தீங்க...? பார்த்திருந்தா.. அது இண்ரஸ்டிங்கா இருந்தா, கமெண்ட் பண்ணுங்க...!

பிக்பாஸ்
BIGG BOSS DAY 10 | “உன்பேரே யாருக்கும் தெரியல; நீயெல்லாம் பேசக்கூடாது!” - நிக்ஸனிடம் சீறிய பிரதீப்!

சரி விஷயத்துக்கு வருவோம். பிரதீப் விஷ்ணுவிடம் கண்டண்டுக்காக “டேய்... இந்த வாரம் நீ ரவீனாவை லவ் பண்ணுடா... நீங்க ரெண்டுபேரும் லவ் பண்ணினா ஜாலியா இருக்கும்” என்கிறார். “டேய் அது என் தங்கச்சிடா” என்கிறார் விஷ்ணு. விசித்திராவும் பிரதீப்பிடம் “டேய் இப்படி எல்லாம் பேசாதடா....” என்கிறார்.

பிரதீப்... என்ன ஆச்சு உங்களுக்கு? கண்டண்ட் கிடைக்கலைனா அடுத்தவங்கள கண்டம் பண்ணிடாதீங்க... (இது நம்ம மைண்ட் வாய்ஸ்.!)

விஷ்ணு
விஷ்ணு

பிரதீப் ரவீனாவிடம், “உனக்கு சரியான பிட், நான் போடறேன்! வெயிட் பண்ணு. நான் எல்லாரையும் அழ வச்சுருக்கேன். உன்ன அழவச்சதில்லை. நீ அழுதால் எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா” என்கிறார். இதல்லாம் ஒரு பெருமையா என்றிருக்கு நமக்கு.

ரவீனா பதிலுக்கு, “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்கிறார். நீங்க வீழமாட்டீங்க ரவீனா, அடுத்தவங்களத்தான் வீழவைப்பீங்க...!

அடுத்தபடியாக கேட்டின் வாசலில் நின்று ஐஷூ, மணி, ரவீனா மூவரும் பேசத்தொடங்கினர். ஐஷூ மணியிடம், “ரவீனாவுக்கும் உங்களுக்கு லவ் இருக்கா இல்லையா” என்கிறார். சந்திரயான் நிலவில இறங்கனதா இல்லையான்னு கேட்டது போல இருந்தது. எத்தனை தடவ!!!

மணி ஐஷூவிடம், “இதுவரை இல்லை. நாங்களே இன்னும் டிசைட் பண்ணல... லவ் வந்தால் சொல்றோம்” என்கிறார்கள்.

விசித்திரா
விசித்திரா

அடுத்து வீட்டுக்குள் தொடங்கியது பேச்சு...!

விசித்திரா மாயாவிடம் “அடுப்பை கொஞ்சம் சுத்தம் செய்” என்கிறார்.

மாயா ”முடியாது” என்கிறார்

“கல்யாணம் ஆயிடுச்சா மாயா?” என்கிறார் விசித்திரா.

“4 தடவ ஆச்சு” என்கிறார் மாயா.

“நீ கிச்சனை கிளீனா வைக்கலைனா அப்படிதான் ஆகும்” என்கிறார் விசித்திரா.

அவ்வளவுதான்... இதை ஒரு புகாராக கேப்டனிடம் எடுத்துச்சென்றுவிட்டார் மாயா.

அடுப்பு அழுக்காக இருப்பதை பார்த்து பொருக்காத விசித்திரா “ஐஷூ உனக்கு நான் அடுப்பு துடைக்க சொல்லி கொடுத்தேனா இல்லையா?” என்கிறார்

“சொல்லி கொடுத்தீங்கம்மா... ஆனா அவரு பண்ணல ”என்று விஷ்ணுவை கை காட்டுகிறார்.

விஷ்ணு என்ன ஏதுன்னு தெரியாமலேயே கோபமாக, “நான் பண்ணனுமா... நீ என்ன பண்ற...” என்று கேட்கவும்,

கோபம் கொண்ட விசித்ரா... “ஏய் அவள அதட்டினா எனக்கு கோபம் வரும். அப்புறம் நான் உள்ள வந்து உன்னை அடிப்பேன்” என்கிறார்.

விசித்திராவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே சண்டை ஆரம்பிக்கிறது. கூடவே மாயாவும் சேர்ந்துக்கொள்கிறார். மாயா எங்கு சண்டை நடந்தாலும் மூக்கை நுழைக்கிறார். ஆனால் மற்ற போட்டியாளர்கள், அவரின் மூக்கை உடைத்து விடுகின்றனர்.

“வேலை செய்ய எங்களுக்கு ஆள் பற்றாக்குறை இருக்கு. ஆகவே உங்களில் ஒருவர் இந்தப் பக்கம் வாங்க...” என்று ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சொல்லவும், அதிலிருந்து பிரச்சனை தொடங்கியது.

பிரதீப்
பிரதீப்

“லிஸ்ட்டில் உள்ளதை மட்டும் சமைத்து கொடுங்கள்” என்று விசித்திரா சொல்ல...

பிரதீப் தேங்காய் சுரண்டிக்கொண்டே விசித்திராவை பார்த்து, “நேத்து போர்டில் நீங்க ரைஸ்னே எழுதல... நாங்க போனா போகுதுன்னு சாதம் செய்து கொடுத்தோம். இல்லைன்னா வெறும் அரிசியை கொடுத்து இருப்போம்” என்று கூறவும்

விசித்திரா ”பிரதீப் நீ தேங்காவ சுரண்டு, எங்கள இல்ல” என்று சொல்லிவிட்டு வேகமாக கடந்துவிட்டார். விசித்திரா டைமிங் காமெடி நன்றாகவே அடிக்கிறார்.!

யுகேந்திரன் விஷ்ணு கோபமாக கத்துவதை பார்த்து, “அவர பாத்திரத்தை வாஷ் மட்டும் பண்ண சொல்லு” என்று சொல்லவும், மாயா விஷ்ணுவிடம் போட்டு கொடுக்கிறார். கோபத்துடன் விஷ்ணு யுகேந்திரனை பார்த்து ”வாயை கழுவிடுவேன்” என்று கூறுகிறார்.

“நல்ல வேலை... காலையில வந்து வாஷ் பண்ணி விடுங்க “ என்றுவிட்டார் யுகேந்திரன்.

பதிலுக்கு, விஷ்ணு ”நல்லா ஜிங்சாங் அடிப்பீங்க, டம்மி பாபா, ராங்க் நம்பர்” என்றேல்லாம் ஏதேதோ கூற, மீண்டும் தொடங்கியது சண்டை.

விஷ்ணுவும் யுகேந்திரனும் சண்டையிடுவதை பார்த்த விசித்திரா, மாயாவிடம் வந்து, “எப்படி என் கண்டெண்ட்” என்கிறார். விசித்திராம்மா... நீங்க எங்கேயோ போயிடீங்க...

இப்படி இரு வீட்டார்குள்ளும் சிறிய பிரச்சனை ஆரம்பித்து பெரிய சண்டையில் வந்து முடிந்தது.

பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் தங்களுக்கான மெனுவை எழுதி போடவும், அதை எங்களால் பண்ணமுடியாது என்று ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கூறவும், “இதை வைத்து நாம் விளையாடுவோம்” என்ற மாயா ஐஷூவை கூட்டு சேர்ந்த்துக்கொண்டு, “எங்களுக்கு கிச்சனுக்கு ஆள் பத்தலை, அதனால் ஒரு ஆள் வேண்டும்” என்றார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் யாரும் ஸ்மால்பாஸ் வீட்டிற்கு போக விரும்பவில்லை. அதனால், ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் ”நாங்க சமைக்க மாட்டோம்” என்று ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மாயாவுக்கு நன்றாகவே தெரியும்... ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்தால் ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் பொருட்களை எல்லாம் பிக் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் எடுத்துக்கொண்டு சென்று விடுவார்கள் என்று! அதனால் மாயாவும் ஐஷுவும் ஆப்பிள், பிரட், சீஸ் போன்றவற்றை தங்கள் சாப்பிடுவதற்கக பதுக்கிக்கொண்டனர்.

செய்த ப்ளான் படி ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் ஸ்டிரைக் செய்ய, பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் அனைத்து சாமான்களையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். நேரம் கடந்துக்கொண்டிருந்தது. ஒருவரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போவதாக இல்லை, இவர்களும் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்குவதாகவும் இல்லை. இருவீட்டார் நடுவில் கேப்டன் விக்ரமின் நிலைமை பரிதாபமாக இருந்தது.

சரவண விக்ரம்
சரவண விக்ரம்

ஜோவிகா, “நீங்க என்ன டாஸ்க் வேணாலும் பண்ணுங்க. ஆனா சாப்பாட்டு விஷயத்துல ஸ்டிரைக் பண்ணாதீங்க... ஏன்னா, இங்க சிலபேருக்கு அல்சர், டயபடீஸ் இதெல்லாம் இருக்கு” என்றார் பொறுப்பாக. ஆனாலும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

இருவீட்டார் பிரச்சனையை போக்க, முடிவாக கேப்டன் விக்ரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு உதவி செய்ய... ஸ்டிரைக் வாபஸ் வாங்கப்பட்டு சமையல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இனி நாளை என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com