பிக்பாஸ் 7: அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய வினுஷா; திரும்பிய போட்டியாளர்களால் களைகட்டும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் சீசன் 7 தமிழ் எபிசோட் முடிவுக்கு வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. வெளியே சென்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டிவி

பிக்பாஸ் 100 வது நாள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் மீதம் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இவர்களுள் யார் டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வரும் நேரத்தில், பிக்பாஸ் சீசன் 7 முடிவடைய இன்னும் சில தினங்களே இருக்கிறது. இதனால், பிக்பாஸ் வீடானது கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் கொண்டாடத்திற்காக, இதில் கலந்துக்கொண்டு வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராய் வீட்டிற்குள் வந்தபடி இருக்கின்றனர். இதில் முதலில் அனன்யா, அக்‌ஷயா இருவரும் அடுத்தடுத்து வீட்டிற்குள் எண்ட்ரி ஆகின்றனர்.

NGMPC22 - 147

பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு வருகிறவர்கள் தங்களோடு சண்டைக்கு வந்தால், மக்களிடமிருந்து கிடைக்கும் ஓட்டும் கிடைக்காமல் போகுமே என்று நினைத்த விஷ்ணு ஆதங்கமாய் பிக்பாஸிடம் சொல்கிறார். “வந்தவங்க எல்லாரும் எங்களுக்கு சப்போர்ட் பண்ணமாட்டாங்க.. எங்களுக்கு சப்போர்ட் பண்ற யாரையாவது உள்ள அனுப்புங்க... ஊரெல்லாம் ஒரண்டை இழுத்து வச்சு இருக்கோம். தேவையில்லாத பஞ்சாயத்து வேற எங்க மேல இருக்கு” என்று பரிதாபமாக பிக்பாஸிடம் கெஞ்சுகிறார். மணிக்கு ரவீனா வந்துவிடமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு. இப்படி மதியம் வரை பொழுது போக.. பின்னர் வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆகிறார்.

அவர் வந்ததும், “எல்லோரும் எப்படி விளையாடுறீங்க” என்று கேட்கவும், “விஷ்ணுவும் அத நீங்கதான் சொல்லணும், எங்களுக்கு நாங்க நல்லா விளையாடிட்டு இருக்கோம்னுதான் நினைக்கிறோம்” என்கிறார்.

பிக்பாஸ் 7
‘உங்கள் ஓட்டு யாருக்கு?’ இறுதிகட்டத்தில் போட்டியாளர்கள்; பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த கொண்டாட்டங்கள்!

“பிக்பாஸ் இப்பொழுதுதான் என்கிட்ட சொல்லி அனுப்பினார், நீங்க வெளியில நடக்குற எதையும் வீட்டுக்குள்ள ஷேர் பண்ணிக்க கூடாதுன்னு ..“ என்று விஷ்ணுவின் எதிர்பார்பிற்கு வினுஷா ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

தினேஷ் வினுஷாவிடம் ”தம்பி உனக்கு போன் பண்ணுனானா” என்று நிக்சனை குறிப்பிட்டு கேள்வி கேட்டார். அதற்கு ”ஆமா எனக்கு போன் பண்ணுனான். ஆனா நான் 70 கேமரா முன்னாடி பேசினதுக்கு 70 கேமரா முன்னாடியே விளக்கம் கொடுங்கன்னு சொல்லி இருக்கிறேன்” என்ற வினுஷா அனைவரிடம் நலம் விசாரித்துவிட்டு, ஓய்வாக இருக்கும் நேரத்தில் அர்ச்சனாவை அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார், “நீங்க நிக்சன் விஷயத்துல என்னை இழுத்து பேசினது தப்பு... நீங்க ஓட்டு வாங்குறதுக்காக என் பேரை இழுத்து பேசினது நல்லா இல்ல... ஆரம்பத்துல நிக்சனிடம், நீ வினுஷா பத்தி பேசினத மக்கள் மறந்துடுவாங்க... கூல்ன்னு சொல்லிட்டு, உங்களுக்கும், நிக்சனுக்கும் பிரச்னைன்னு வரும்பொழுது என் பெயரை இழுத்து பேசினது எந்தவிதத்துல நியாயம்?... ” என்றதும், அர்ச்சனாவுக்கு சரியான பதிலை சொல்லத்தெரியலை.

NGMPC22 - 147

வினுஷா இடத்தில் அர்ச்சனா இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும். ஆனாலும் அர்ச்சனா வினுஷாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். “எனக்கு நிக்சனை எதிர்க்க இதை தவிற வேற வழி தெரியல... நான் ஏன் அப்படி செய்தேன் என்றே தெரியவில்லை. குழந்தை தனமாக நடந்துக் கொண்டுவிட்டேன். மன்னிச்சுடுங்க... “ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com