‘உங்கள் ஓட்டு யாருக்கு?’ இறுதிகட்டத்தில் போட்டியாளர்கள்; பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த கொண்டாட்டங்கள்!

கடைசிச் சுற்றுக்கு தயாராகும் போட்டியாளர்கள், பிக்பாஸ் வீடு கொண்டாட்ட வேடிக்கைக்கு தயாராகி வருகிறது
அனன்யா, மாயா
அனன்யா, மாயாவிஜய் டிவி

பிக்பாஸ் 99 வது நாளை கடந்த நிலையில், இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தொடக்கத்தில் போட்டியாளர்களாக ஐஷு, விஷ்ணு, மாயா, சரவணன், யுகேந்திரன், விசித்திரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவினா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினிஷா, மணி சந்திரன், அக்‌ஷயா, ஜோவிகா ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர்கள்.

இதில் இலக்கியவாதி பவா செல்லத்துரை போட்டி ஆரம்பித்த சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினர். அதன் பிறகு, விஜய் வர்மா, அனன்யா வெளியேறி மீண்டும் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தனர். மேலும், போட்டியாளர்களாக அன்னபாரதி, கானாபாலா, தினேஷ், அர்ச்சனா, ப்ராவோ ஆகியோர் உள்ளே வந்தனர்.

இதில், வோட்டின் அடிப்படையில் பலர் வெளியேற, பிக்பாஸ் தந்த பணப்பெட்டி டாஸ்கில், 16 லட்ச பணத்துடன் பூர்ணிமா வெளியேறினார். இப்போட்டியானது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இறுதிகட்ட போட்டியாளர்களாக மணி, தினேஷ், விஷ்ணு, மாயா, அர்ச்சனா, விஜய் ஆகியோர் மட்டுமே மீதமுள்ளனர். இதில் யார் கோப்பையை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நேற்று ஓட்டிங் சேகரிப்பு டாஸ்க் நடந்தது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்காக வோட்டிங் சேகரிப்பு நடத்தவேண்டும் என்று பிக்பாஸ் சொல்ல...

விஜய் டிவி

மணி தினேஷிற்கும், மாயா விஜய்க்கும், தினேஷ் விஷ்ணுவுக்கும், விஷ்ணு மணிக்கும், விஜய் மாயாவுக்கும் ஓட்டு போட சொல்லி ரசிகர்களை கேட்கின்றனர். இதில் அர்ச்சனாவுக்கு யாருமே ஓட்டு கேட்கவில்லை. ஆனால் அர்ச்சனா தினேஷுக்கு ஓட்டு கேட்டார்.

ஆனால் மக்கள் ஓட்டு யாருக்கு என்றும் இறுதியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்றும் இன்னும் சில தினங்களில் தெரியவரும். இந்நிலையில் 100 நாளான இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டாட்டத்திற்காக அனன்யா மற்றும் அக்‌ஷயா வந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com