BIGG BOSS Day 9 | "வீட்டை விட்டு போயிடுறேன்"- சவால்விட்ட மாயா; குறும்படம் போடுவாரா பிக்பாஸ்?

பிக்பாஸ்: ஒன்பதாம் நாளான நேற்று பிக் பாஸ் வீடு கொஞ்சம் சுவாரசியம் குறைவாகத்தான் இருந்தது.
பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7Twitter

 பிக்பாஸ்: ஒன்பதாம் நாளான நேற்று பிக் பாஸ் வீடு கொஞ்சம் சுவாரசியம் குறைவாகத்தான் இருந்தது.

கூல் சுரேஷ் அடித்தொண்டையிலிருந்து “வென்று தணிந்தது காடு; ஸ்மால் பாஸுக்கு வணக்கத்தைப் போடு ”அப்டின்னு கத்துவது எரிச்சலை உண்டு பண்ணுகிறது. ஜோக் என்ற பெயரில் சப்பாத்தியை சுருட்டி பிக் பாஸ் சாப்பிடுங்கள் என்று சொல்வதெல்லாம் ஓவியாவின் அப்பட்டமான காப்பி. சார்… சிரிக்கிறாப்ல ஏதாவது காமெடி பண்ணுங்க.

சரி இவர்தான் இப்படி என்றால் இதற்கு மேல், மாயா பேசுவதை கேட்பததென்பது காதில் இருந்து ரத்தம் வராத குறைதான். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் தனது பெர்பாமென்ஸை நிரூபிக்க வேண்டும் என்று ஆளாளுக்கு எது எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை.  

பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ்7: ”பிரதீப் கூட நான் தங்கமாட்டேன்..எனக்கு பயமா இருக்கு”-மாயாவுக்கு பிக்பாஸ் கொடுத்த அட்வைஸ்!

முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் மாயா, விஷ்ணு, ஐஸு மூணு பேரும் சேர்ந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களை வெறுப்பேற்றும் விதமாக இது சமைக்க வராது, அது சமைக்க முடியாது என்று மூவரும் கூடி ஆடுவது போர்.

இது தவிர ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்களுக்கு எதிராக, அவர்கள் கேட்டதை சமைக்க கூடாது என்று கூட்டு சதி திட்டம் ஒன்றை தீட்டுகிறார்கள்  இதற்கு பிரதீப் ஒத்துழைக்கவில்லை. ”நீங்கள் சமைக்கவில்லை என்றால் நான் சமைத்து தருகிறேன்” என்று கூறுகிறார். இதற்கு ஒரு காரணத்தையும் பிரதீப் கூறுகிறார்.  ஏனெனில் அவருக்கு மாயா அன் கோ மீது உள்ளூர ஒரு கோபம். தனது அம்மாவை மாயா தவறாக பேசியது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனாலும் எனக்கு அவங்க கூட ஒட்டவில்லை, என்ற காரணத்தை கூறுகிறார்.

ஒரு பள்ளிக்குள் நுழைந்தாலோ அல்லது கல்லூரிக்குள் நுழைந்தாலோ எவ்வாறு கச்சமுச்சா என்று சத்தம் கேட்குமோ அதுபோல் இவர்கள் பேசிக் கொள்வது எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. அதாவது அவரவர்கள் தங்களது  பெர்பாமென்ஸை கொண்டுவர ஏதோ ஒன்று பண்ணுகிறார்கள். அது எல்லாமே ரசிகர்களை கவர்கிறதா என்பது சந்தேகம்தான்.

அதேபோல் மாயா முடிந்துபோன பிரதீப் விஷயத்தை மீண்டும் மீண்டும் கிளறி, நான் பிரதீப் அம்மாவை பற்றி ஏதும் பேசவில்லை. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் இந்த வீட்டை விட்டு செல்கிறேன் என்று கூறும்போது, நாமே உள்ள போய் மாயாவின் பெட்டி படுக்கையை எடுத்து கொடுத்து சரி தாயே… போயிட்டு வாம்மா என்று சொல்லலாம் போலிருக்கிறது. ஓவர் பில்டப்.

raveena daha
raveena daha

ரவீனா, நிக்சனை கூப்பிட்டு உட்கார வைத்து கலாய்த்து அனுப்புகிறார். நிக்சனுக்கு அவர் கலாய்ப்பது தெரிகிறதா என்று தெரியவில்லை… ஆனால் கொஞ்சம் ரவீனாவிடம் தடுமாறுகிறார்; அது தெரிகிறது. நிக்சனை பார்த்து கிழிஞ்ச சட்டை என்று கேலி செய்வது நிக்சனை அவமானப்படுத்துவதுபோல் இருக்கிறது. இது எதில் போய் முடியும் என்று தெரியவில்லை. நிக்சனிடம் நீ எல்லோரையும் தம்பி என்று கூப்பிடுகிறாய்; நான் உனக்கு தம்பி இல்லை. என்னை பற்றி ஏதாவது தவறாக உன் மனதில் இருந்தால், அழித்துவிடு. எனக்கும் உனக்கும் ஒன்றுமில்லை என்கிறார்.

நிக்சன் எனக்கும் உனக்கும் கனெக்ட் எதுவும் இல்லையா என்று கேட்க, ரவீனா இருக்கு இருக்கு என்று ஆமோதிக்கிறார். இந்த விஷயம் மணிக்கு தெரியுமா ரவீனா?

அடுத்ததாக டாஸ்க் ஆரம்பிக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற டாஸ்.  இதில் அக்ஷயாவும் விஜயும் விளையாட அக்ஷயா தோற்கிறார். ஸ்மால் பாக்ஸ் வீடு ஜெயிக்கிறது.

அதேபோல் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அக்ஷயா தனது பெர்பாமென்ஸை நிரூபிப்பதற்கு பாட்டு ஒன்றை பாடி கதை என்று ஒன்றை சொல்கிறார். கதை ஒன்றும் சுவாரசியம் இல்லை என்றாலும் இவரது நடிப்பு பரவாயில்லை. இதுபோல் நெகட்டிவ் கதை எல்லாம் இங்கு எதற்கு என்றுதான் தோன்றுகிறது.  

பிக்பாஸ் என்பது மக்களுக்கு ஒரு என்டர்டைன்மென்ட். ஆனால் இதுபோல் அழுகாச்சி கதை சொல்லி மக்கள் மனதில் இடம் பிடித்துவிடலாம் என்று அக்ஷயா நினைக்கிறார். இதில் அவர் அழுவதுபோல் நடிப்பது எரிச்சலை ரொம்பவும் தூண்டுகிறது. தேவையே இல்லாத ஆணியாக தெரிகிறது.

ஆனால் இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். அதாவது உணர்ச்சிவயப்பட்டு கத்தி சொல்லும்போது தவறு, அங்கு சரியானதாக பார்க்கப்படுகிறது. இது ஜோவிகா விஷயத்திலும் அப்படிதான். “எனக்கு படிப்பு வரல… நான் படிக்கமாட்டேன், படிப்புதான் ஒருவரை உயரத்துக்கு கொண்டு வரும் என்பது தப்பு, படிப்பு வாழ்க்கைக்கு முக்கியம் இல்லை” என்று உணர்ச்சி ததும்ப கத்தி, உடல் மொழியிலும் திமிறாக நின்று சொன்னதால்தான், இலக்கியவதியான பவா கூட படிப்பு முக்கியமில்லை என்ற கருத்தை தெரிவித்தார். கோபத்தில் எடுக்கும் முடிவு அவர்களுக்கு மட்டுமல்ல எதிரில் இருப்பவருக்கும் தவறான முடிவை காட்டுகிறது.

அடுத்ததாக ஹவுஸ் கிளீனிங் டாஸ்க் வருகிறது. இதிலும் ஸ்மால் பாஸ் வீட்டினர் வெற்றி பெறுகிறார்கள்.

ஜோவிகாவை பற்றி பிரதீப், கூல் சுரேஷிடம் பேசும்போது, “ஜோவிகாவுக்கு யாரை எங்கே தட்டினா மாட்டுவாங்கன்னு தெரியும். அது பக்காவா விளையாடிட்டு இருக்கு, ஃஸோ… நானே அதுகிட்ட கொஞ்சம் அடங்கிதான் போயிட்டு இருக்கேன். பரவாயில்ல ஜென்டிலா கேம் ஆட்றா... எனக்கு அவள் விளையாட்டு பிடிச்சிருக்கு” என்கிறார்.

நிக்சனை பற்றி கூறும்போது, “நிக்சனை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனை இப்போவே குத்தலாமா இல்ல கொஞ்ச நாள் கழித்து குத்தலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஏன்னா…, பணக்கார பசங்களெல்லாம் முதல்ல வெளியில அனுப்பிடனும், யாரு ஏழை பசங்களோ அவங்கள வச்சு விளையாடலாம்னு நினைக்கிறேன். அதனால நான் இவங்களை எல்லாம் டார்கெட் பண்ணல” ன்னு சொல்லும்போது, பிரதீப் நீ நல்லவனா? கெட்டவனா? என்ற எண்ணம் தோன்றுகிறது.

மறுபடி மாயா பிரதீப்பிடம் வந்து “நான் உங்க அம்மாவை பத்தி தப்பா எதுவும் சொல்லல… அப்படியே குறும்படம் போட்டு காட்டி அதில் நான் சொன்னதா தெரிஞ்சா அப்படியே நான் இந்த வீட்ட விட்டு போயிடுறேன்” என்கிறார். வெயிட் பண்ணுமா… குறும்படம் வெளிவரட்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com