BIGG BOSS | “எல்லாம் நடந்த பிறகும், எதுவுமே நடக்காத மாதிரி சகஜமா இருந்தது...”- உடைத்துப்பேசிய பிராவோ

(நேற்று) பிக்பாஸ் நிகழ்ச்சியின் 52 ஆவது எபிசோடில் தனது வாழ்க்கையில் நடந்த சில மிகமோசமான நிகழ்வுகளை பகிர்ந்தார் பிராவோ. அவர் பேசியது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ்Insta

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 52 ஆவது எபிசோடில் தனது வாழ்க்கையில் நடந்த சில மிகமோசமான நிகழ்வுகளை பகிர்ந்தார் பிராவோ. அவர் பேசியது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ்
‘சூட்டிங்கில் அன்று நடந்த கொடுமை; ஒருவர் கூட எனக்காக குரல் கொடுக்கல’ - விசித்ரா சொன்ன கண்ணீர் கதை!

தமிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக, ‘உங்கள் வாழ்க்கையின் பூகம்பம்’ என்றொரு டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஹவுஸ்மேட்ஸ் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் போன்றொரு நிகழ்வை பகிர்ந்துக்கொள்ளவேண்டும்.

இதில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கூறிவருகின்றனர். அது கேட்கும் நமக்கும் அதிர்ச்சியையே தருகிறது. முன்னதாக 50 ஆவது எபிசோடில் திரைத்துறையிலிருந்து தான் விலகியதற்கு பின்னிருந்த ‘Casting Couch’ குறித்து நடிகை விசித்திரா பேசினார்.

பிக் பாஸ்
‘சூட்டிங்கில் அன்று நடந்த கொடுமை; ஒருவர் கூட எனக்காக குரல் கொடுக்கல’ - விசித்ரா சொன்ன கண்ணீர் கதை!

தற்போது அந்தவரிசையில், போட்டியாளர் பிராவோ தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பிராவோ பேசுகையில், “என் அப்பாவின் உயிர்போகும்போது, என் அம்மா அவர் பக்கத்திலேயேதான் இருந்தார். எங்கள் கண் முன்னேவே அப்பாவின் உயிர் பிரிந்தது. அது என்னை ரொம்பவும் பாதித்தது. உண்மையில் என் அப்பாவுக்குத்தான் நான் திரைத்துறையில் நடிக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்தது.

அப்பா இறந்தபிறகு, ஒரு தயாரிப்பாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னோடு பேசியவர் என்னை வைத்து ஒரு விளம்பரம் எடுப்பதாக கூறினார். அதற்காக என்னை கோயம்புத்தூர் வருமாறு கூறினார். நானும் நம்பி சென்றேன்.

ஃபோனில் பேசியவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. வாய்ப்பு என்பதால் தைரியமாக சென்றேன். அங்கே என்னை ஒரு தங்கும் விடுதியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்ற அவர் உடனடியாக அறைகளின் கதவுகளை தாழிட்டு கொண்டு என் சட்டையை கிழிக்க ஆரம்பித்து விட்டார். புரிகிறதா உங்களுக்கு என்ன நடந்தது என்று?.... எனக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னிடம் அத்துமீறினார் அவர். உண்மையில் அத்தருணத்தில் மிகுந்த அதிர்ச்சி அடைந்து என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.

இந்த மாதிரியான செய்தியை நான் செய்திகளில்தான் பார்த்ததுண்டு. ஆனால் அது எனக்கே நடந்துள்ளது என்றபோது... அதற்கு எப்படி பதில்வினை செய்வது என்று கூட எனக்கு தெரியவில்லை.

பிக் பாஸ்
“துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட முடியவில்லை; மன்னிக்கவும்” - கௌதம் வாசுதேவ் மேனன் வருத்தம்!

மனதில், ‘எதற்காக இங்கே வந்தோம். இந்த வாய்ப்பு எனக்கு தேவையா? யாரையோ ஒருவரை நம்பி இப்போது இங்கே நான் இப்படி நிற்கிறேனே!’ என்று தோன்றியது. அப்போது என்மீதே எனக்கு மிகுந்த வெறுப்புணர்வு தோன்றியது. சட்டென நான் கதவை அடித்து தள்ளிவிட்டு, சட்டை இல்லாமல், பேண்ட் கிழிந்த நிலையில் அந்த அறையைவிட்டு ஓடி வந்தேன். எதுவும் நடக்கவில்லை... ஆனாலும் என்னால் அந்த சம்பவத்தில் இருந்து வெகு நாட்களாக மீண்டே வர இயலவில்லை. இந்த சம்பவம் என் மனதில் பெரிய கீரல் ஒன்றை ஏற்படுத்திவிட்டது.

பல வருடங்களுக்கு முன் இது நடந்திருந்தாலும்கூட, இப்போதும் யாரென்று தெரியாத ஒரு சக ஆண்ணோடு எதாவது லிப்டிலோ அல்லது வேறு எதாவது இடத்திலோ பயணிக்க நேர்ந்தால் என் மனதுக்குள் ஒரு அச்சம் எப்போதும் ஏற்படும். அந்த அச்சம் இன்று வரைக்கும் என்னுள் உண்டு.

இதனையெல்லாம் மறப்பதற்காகதான் நான் வேறு நாட்டுக்கு செல்ல நினைத்தேன். ஆனால் எனக்கு இங்கு இருக்க வேண்டும் என்றுதான் விருப்பம். இருப்பினும் மொத்தத்தையும் வெறுத்து இங்கிருந்து நான் சென்ற இடம்தான் துபாய்” என்று தெரிவித்தார். பிராவோ, துபாயில் வானொலியில் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராவோவின் இச்சம்பவம், அங்கிருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவத்தின்போது எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, கூல் சுரேஷ் சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்தார். கூல் சுரேஷின் செயல், பலரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.

டாஸ்க் முடிந்தபிறகு பிராவா குறித்து விசித்ரா தெரிவிக்கையில் விஷ்ணுவிடம் பேசுகையில்கூட, “பிராவோவின் கதைய கேட்டு எனக்கு அந்நபர் மேல் கோபம்தான் வருகிறது. இதுவே என் பிள்ளைக்கு நடந்திருந்தால்... நான் எப்படியாவது அந்த நபரை தேடிக்கண்டுபிடித்து அடித்திருப்பேன். பிராவோ சொல்வதை கேட்கும்போதே வருத்தமாகிவிட்டது. பெண்களை போல ஆண்களும் இங்கு மிகுந்த பாதுகாப்பாகதான் இருக்க வேண்டும்.” என்று அம்மாக்களுக்கே உள்ள அன்போடும் ஆதங்கத்தோடும் தெரிவித்திருந்தார். விஷ்ணுவும் அதை ஆமோதித்தபடி சென்றார்.

இரவில் மாயா பிராவோவிடம் ‘இப்ப நீங்க ஓகேவா’ என கேட்கையில், “ஓகேதான். பல வருடங்களாக இதை என் மனதுக்குள் வைத்திருந்து துருப்பிடித்துவிட்டது. நான் ரொம்ப குறைவான அளவில்தான் சம்பவத்தை பகிர்ந்துள்ளேன். இந்த நினைவுகளையெல்லாம் நான் மறக்க நினைக்கிறேன். இது மாதிரி வாழ்க்கையில் ஒருவரை கன்மூடித்தனமாக நம்பும் மனிதர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்த கதை. இனியாவது பாதுகாப்பாக இருக்க இந்த கதை ஒரு பாடமாக இருக்கும்.

ஆணோ பெண்ணோ மிகுந்த பாதுகாப்பாக இருப்பது அவசியம். மிருங்களால் நிறைந்த உலகம் இது. என் அப்பா இறந்தபோது 12 லட்சம் ரூபாய் வரை எங்களுக்கு கடன் இருந்தது. அதை நான் அடைக்க வேண்டும் என்றுதான் துபாய்க்கு சென்றேன் என்று என் வீட்டில் நினைத்தார்கள். அதுவும் ஒரு காரணம்தான். ஆனால், ’என் முகம் யாருக்கும் தெரிய வேண்டாம்.. ’ என்று வெறுத்துதான் ஒடினேன்.

சட்டை கிழிந்த நிலையில் அங்கிருந்து ஓடிவந்த என்னை பார்த்த அந்த விடுதியின் பாதுகாவலர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். உண்மையில அப்போது அவரையும் பார்த்து எனக்கு பயம்தான் ஏற்பட்டது. இதிலும் பெரிய கடினம் என்னவென்றால்.... எல்லாம் நடந்த பிறகும் வீட்டில் எதுவும் தெரியாமல் சகஜமாக இருந்ததுதான். சம்பவம் நடந்த பிறகு அடுத்த 3, 4 மாதங்களில் நான் துபாய்க்கு சென்றுவிட்டேன். அப்போதுதான் அந்த சம்பவத்திலிருந்து எனக்கு வெகு தொலைவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

பிராவோவின் வார்த்தைகள், சமூகவலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்ற குரல்கள் ஒலிக்கும் இந்த நேரத்தில், ‘பாலியல் சீண்டல்கள் பெண்களோடு மட்டும் நின்றுவிடவில்லை, ஆண்களுக்கும் இருக்கிறது’ என்பதை கொட்டுவைத்து நமக்கெல்லாம் இன்னொருமுறை உணர்த்தியுள்ளது பிராவோவின் பேச்சு.

விசித்திரா கூறியதை போலதான் ’ஆண் , பெண் இருவருக்குமே பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்...’

பிக் பாஸ்
கொரோனா கால மாணவர் நலன் 12: ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள்... வெளிவராதது ஏன்?

தவறு செய்யாத மனிதர்கள் தங்களை மறைத்து கொள்ளும் நிலைமாறி, தண்டிக்கபட வேண்டியவர்கள் தலை நிமிர்ந்து நடக்கும் நிலை ஒழிக்கப்பட வேண்டும். இது இந்த நிகழ்வில் மட்டும் இல்லை. சமூகத்தில் நடக்கும் எல்லா வகையான சுரண்டல்களிலும் மாற்றப்படவேண்டும்.

எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி... சக மனிதனை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ எந்தவகையிலாவது துன்புறுத்த நினைத்தால், நினைவுக்கு வரவேண்டியது, ‘எதிரில் இருப்பதும் என்னை போன்ற மனிதன்தான் என்பதே’. ’மனிதம்’ ஒன்றே எல்லா கொடுங்செயல்களுக்கும் தீர்வாகும்....!! இப்படியான பிரச்னைகளுக்கு சட்டப்படியான அனுகுமுறையும் கட்டாயம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com