BIGG BOSS DAY 22, 23 | ‘அநியாயம் நடந்தா ரொம்ப பொங்குறீங்க… கொஞ்சம் ஸ்லோவா பொங்குங்க’

‘யாருக்காவது அநியாயம் நடந்தா நீங்க ரொம்ப பொங்குறீங்க… அந்த பொங்கல கொஞ்சம் ஸ்லோவா பொங்குங்க’ - என நிக்ஸனை பார்த்து கூறினார் இந்த வார கேப்டன் பூர்ணிமா. 23 வது நாளில் நடக்கும் பிக்பாஸ் சம்பவங்களை இங்கே பார்க்கலாம்.
BIGG BOSS DAY 23
BIGG BOSS DAY 23BIGG BOSS
BIGG BOSS DAY 23
Bigg Boss 7 Day 21 | பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜய்; கூல் சுரேஷ் ஹாட் சுரேஷாக மாறிய மர்மம்!

(22-வது நாளின் சில நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியபடி தொடங்கிவிடுவோம் இன்றைய தொகுப்பை!)

22வது நாள்:

பிக்பாஸில் விஜய் வெளியேறிய பிறகு கேப்டன் பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல 6 பேரை தேர்வு செய்தார். அதன்படி மணி, யுகேந்திரன், ஜோவிகா, நிக்ஸன், பிரதீப், அக்‌ஷயா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றனர். இதில் வைல்டு கார்ட் ரவுண்டில் 5 பேர் போட்டியாளர்களாக அடுத்த வாரம் களமிறங்க இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

BIGG BOSS DAY 23
BIGG BOSS DAY 23

நிக்ஸன் கடந்த சில நாட்களாக ஐஷூவுடன் அதிகமாக பேசிவருவது தெரிகிறது. அதற்கு சான்றாக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு நிக்ஸனின் பெட்டியை ஐஷூ கொண்டு வந்து கொடுத்து வழியனுப்புகிறார். பதிலுக்கு நிக்ஸன் ‘நான் இல்லையென்றால் கவலையாக இருக்குமா?’ என்று கேட்கிறார். இங்கு ஏற்கனவே ரவீனா மணியின் கதை ஒருபக்கம் ஓடிக்கொடிண்டிருக்கிறது. புதிதாக இவர்களின் நட்பு காதலாக மாறும்போல.. ம்ம், பொருத்திருந்து பார்க்கலாம்.

அடுத்ததாக இந்த வார நாமினேஷன் பிராஸஸ் நடைப்பெற்றது. அதில் விஷ்ணு, மணி, பிரதீப், மாயா, வினுஷா, அக்‌ஷயா, கூல் சுரேஷ், ஜோவிகா, நிக்ஸன், விக்ரம், யுகேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

இதில் பிரதீப் விஷ்ணுவை ட்ரிகர் செய்துவிட, விஷ்ணு செமையாக கோபப்படுகிறார். விசித்திரா பற்றி பிரதீப் பேசியதையெல்லாம் நியாபகப்படுத்தி விடுகிறார் விஷ்ணு. இதற்கு பதில் ஏதும் சொல்லாத விசித்திரா, இருவருக்கும் இடையில் நடக்கும் வாதத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தார். அதற்கு காரணம், உண்மை பிக்பாஸுக்கும் மக்களாகிய நமக்கும் தெரியும் என நினைத்திருக்கலாம்.

Vishnu vijay, Pradeep Anthony, Yugendran
Vishnu vijay, Pradeep Anthony, YugendranBIGG BOSS DAY 23

ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் நிக்ஸனும், ஐஷூவும் அடித்துப்பேசி விளையாட, அதைப் பார்த்த ரவீனா இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள தற்செயலாக அந்தபக்கம் வருவதைப்போல வந்து, “சாரி நீங்க பேசிட்டு இருக்கும் போது நடுவுல வந்து டிஸ்டிரப் பண்ணிவிட்டேன்” என்று சொல்லிவிட்டு செல்கிறார்!

நிக்ஸனுடன் பேசிமுடிச்சாச்சா?

இருவருக்குள்ளம் ஏதாவது நடக்குமா என்பதை ரவீனா எதிர்பார்த்துக்கொண்டிருப்பதைப் போல தோன்றுகிறது. இதற்காக ரவீனா அடிக்கடி நிக்ஸனை சுற்றுவதைப் பார்த்த மணிக்கு ரவீனா மேல் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. “நிக்ஸனுடன் பேசிமுடிச்சாச்சா?” என்று மணி ரவீனாவிடம் கேட்க, “இதெல்லாம் என்னிடம் கேட்காத… இது எனக்கு பர்சனல்” என்று சொல்கிறார் அவர்.

Manichandra, Raveena
Manichandra, RaveenaBIGG BOSS DAY 23

“அப்படியா? அப்படி என்றால் எனக்கும் பர்சனல் இருக்கும் அதையும் நீ கேட்காத… நான் Day 1-ல இருந்து உங்கிட்ட சொல்லிட்டு வரேன். நீ பர்சனலா யாருடனும் கனெக்ட் ஆகாதன்னு…” என்று மணி மறுபடி மறுபடி ரவீனாவிடம் சொல்லி வருகிறார். ரவீனாவின் விஷயத்தில் மணி ரொம்பவும் பொசஸிவாக இருப்பதாகத் தோன்றுகிறது.

கிளீனிங் டாஸ்க்:

அடுத்தது கிளீனிங் டாஸ்க். இதில் வைத்த ஃபுட்பால் டாஸ்க்கில் மணியும், போர்ட் கிளீனிங் டாஸ்க்கில் விஷ்ணுவும் வெற்றி பெறுகிறார்கள். அதனால் கிளீனிங்கில் ஒருவேலையை பிக்பாஸ் வீட்டினரும், இன்னொரு வேலையை ஸ்மால் பாஸ் வீட்டினரும் செய்ய வேண்டி வந்தது. இதில் பூர்ணிமா நேர்மையான கேப்டனாக இல்லை என்று கூறிய மணி, ‘கேப்டன் டவுன், கேப்டன் டவுன்…’ என்று போர்கொடி தூக்க ஆரம்பித்தார். இதில் விஷ்ணுவுக்கும்ம், பிரதீப்பிற்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு, போராட்டம் நிறைவு பெற்றது.

Vishnu Vijay, Manisharma, Poornima
Vishnu Vijay, Manisharma, PoornimaBIGG BOSS DAY 23

23வது நாள்:

23வது நாளான நேற்று, ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்களுக்கு யூனிஃபார்ம் வழங்கப்பட்டது. யூனிஃபார்ம் தங்களுக்கு கன்வீனியண்டாக இருப்பதாக யுகேந்திரனும், ஜோவிகாவும் பிக்பாஸிடம் நன்றி தெரிவித்தனர்.

நிக்ஸன் ரவீனாவிடம், “நீ நினைப்பது போல் இல்லை. எனக்கும் ஐஷூக்கும் இடையில் வெறும் நட்புதான். வேறு ஏதும் இல்லை" என்று கூறுகிறார்.

ரவீனா நிக்ஸனிடம், “நீங்க அடிக்கடி என்னையும் மணியையும் சேர்த்து வச்சு பேசினது எங்களுக்கு எப்படியிருக்கும்னு இப்ப புரியுதா…. நாங்க ரெண்டுபேரும் தனியா நேரம் செலவிடறோம்னெல்லாம் பேசினீங்கள்ல… இதே லிஸ்ட்லதான் நீங்களும் உள்ள வர்றீங்க…” என்கிறார்.

BIGG BOSS DAY 23
BIGG BOSS DAY 23

இதற்கு நிக்ஸனும், “வெறும் கண்டண்ட்காக நாங்க பேசறோம். இதுல எங்களுக்குள்ள ஏதும் இல்ல… ஆனா அக்‌ஷயாகூட எனக்கு ஐஷூ அளவிற்கு பாண்ட் வரல…." என்கிறார்.

“பூர்ணிமாதான் எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்”

அடுத்ததாக டாஸ்க் ஒன்று ஆரம்பிக்கிறது. இதில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவரும் போட்டிக்கு தயாராகிறார்கள். அப்படி மாயாவும், யுகேந்திரனும் பங்கு கொண்டனர். இதில் இருவரும் தோற்றதும், பிக்பாஸ் வீட்டிலிருக்கும் 5 பேரின் மாற்று உடைகளை பிக்பாஸ் எடுத்து சென்றுவிடுகிறார்.

வேலையெல்லாம் முடித்ததும், ரவீனாவும் மணியும் ஒருபுறமும், ஐஷூ நிக்ஸன் ஒருபுறமும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு டைனிங் ஹாலில் மாயா, பூர்ணிமா, விஷ்ணு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். இதில் மாயா விஷ்ணுவிடம், ‘பூர்ணிமா வெளியேறினால் நீங்கள் அழுவீற்களா?’ என்று கேட்கிறார்.

“கண்டிப்பாக அழுவேன். பூர்ணிமாதான் எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்" என்கிறார்.

ஆனால் பூர்ணிமாவோ விஷ்ணுவைவிட விக்ரமுடன் பேசுவதைதான் அதிகம் விரும்புவதாக தெரிகிறது. இருவரும் ரகசியமாக பேசிக்கொள்கிறார்கள்.

Saravana Vickram, Poornima
Saravana Vickram, PoornimaBIGG BOSS DAY 23

இதில் பூர்ணிமா, விக்ரமிடம் 'நீ அழகா இருக்க…' என்கிறார். விக்ரமும் வெட்கப்படுகிறமாதிரி நெளிகிறார். இதை கண்ட பிக்பாஸ் இருவரின் நெருக்கத்தை சபையினர் முன் போட்டுக்கொடுத்துவிடுகிறார். இருவரும் வளையில் மாட்டிக்கொண்ட எலி மாதிரி, “இல்ல பிக்பாஸ் நாங்க சும்மாதான் பேசிக்கொள்கிறோம், எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல… “ என்று கூறுகின்றனர்.

‘இன்னும் எத்தனை பேருப்பா இருக்கீங்க... முடியலை’ என்றாகிவிட்டது நமக்கு

பேட்டரி டெட் டாஸ்க்

அடுத்தது பேட்டரி டெட் டாஸ்க். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2 கோல்ட் ஸ்டார் கிடைக்கும். இந்த விளையாட்டில் மாயா க்ரூப் சிலரை வெளியேற்றவேண்டும் என்று ப்ளான் செய்து விளையாடினர். அதன்படி சிலரை விளையாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டனர். இதில் விஷ்ணு கீழே விழ அதற்கு காரணம் அக்‌ஷயாதான் என்று நினைத்த விஷ்ணு அக்‌ஷயாவிடம் பிரச்னை செய்கிறார். அவரின் பேச்சு ஒருமையில் இருக்கிறது. கோபத்தில் அக்‌ஷயாவை அறைந்து விடுவார் போன்று இருந்தது.

BIGG BOSS DAY 23
BIGG BOSS DAY 23

ஆனால் இதற்கு காரணம் ஐஷு என்பது வீடியோவில் பார்த்தால்தான் தெரியவரும். ஐஷூவோ, இவர்கள் அனைவரும் சண்டையிட்டுக்கொள்வதை பார்த்தப்படி எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருக்கிறார். இறுதியில் நிக்ஸனுக்கும், விஷ்ணுவும் மோதிக்கொள்கிறார். ஒருவழியாக அக்‌ஷயாவின் முயற்சியில் ஜோவிகா வெற்றி பெற்று 2 கோல்ட் ஸ்டாரை பெறுகிறார்.

கேப்டன் என்ற முறையில் பூர்ணிமா நிக்ஸனிடம், “நீங்க யாருக்காவது அநியாயம் நடந்தா ரொம்ப பொங்குறீங்க… அந்த பொங்கல கொஞ்சம் ஸ்லோவா பொங்குங்க… “ என்றார்.

இப்படியாக இன்றைய இன்றைய பொழுது (எபிசோட்) பிரச்னைகளுக்கு மத்தியில் அக்‌ஷயாவால் இரு கோல்ட் ஸ்டார் வாங்கிய ஜோவிகா, மணிக்கும் ரவீனாவிற்கும் நடுவில் ஏற்பட்ட மோதல் என்று முடிந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com