Bigg Boss 7 Day 21 | பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜய்; கூல் சுரேஷ் ஹாட் சுரேஷாக மாறிய மர்மம்!

சாபக்கல்லை தடைக்கல்லாக மாற்றிய கமல். கூல் சுரேஷின் ஜோக்கை கண்டித்த போட்டியாளர்கள்.
Cool Suresh
Cool SureshBigg Boss

இந்த வாரம் எவிக்‌ஷன் பிராஸஸில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜய்!

ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்ட பிக்பாஸ் வீட்டினர்:

பிக்பாஸில் வாரத்தின் இறுதி நாளான நேற்று வழக்கம்போல் எவிக்சன் பிராசஸ் நடந்தது. கமல்ஹாசன் திரையில் தோன்ற போட்டியாளர்கள் எழுந்து நின்றார்கள். “ஸ்மால் பாஸ் வீட்டினர்தான் நன்றாக விளையாடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஒரு க்ளாப்” என்றதும் பிக்பாஸ் வீட்டினர், ஆமா சார் சின்ன வீடுனாலும் அங்க தான் ஜாலியா இருக்கும். எங்களுக்கும் அங்க போகதான் ஆசை” என்று பிக்பாஸ் வீட்டின் ஒட்டுமொத்த சார்பாக யுகேந்திரன் சொல்ல… “ வீடு சின்னதா இருந்தாலும் அங்க தான் நிம்மதி இருக்கு” அப்படீன்னு சொல்லவரீங்களா? என்று கேட்கிறார் கமல்

ஆக்ஸிஜன் சிலிண்டர் மேட்டரில் யுகேந்திரனின் நிலை

அடுத்ததாக ஆக்ஸிஜன் சிலிண்டர் மேட்டரில் யுகேந்திரன், ஸ்மால் பாஸ் வீட்டிற்காக விளையாண்டாலும் எங்களுக்கு சாதகமாக விளையாடுறேன்னு சொன்னார் என்று உண்மை விளம்பியாக நிக்ஸன் எடுத்து சொல்ல… ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்தவர்களின் ரியாஷனை பார்க்கணுமே….

‘சார்… இப்பதான் புரியுது ஏன் யுகேந்திரன் தன்னிடம் இருந்த ஆக்ஸிஜன் பாட்டிலை நான் கேட்டும் தரலைன்னு.. எனக்கு அப்பவே டவுட்டு தான் சார். அது இப்போ க்ளியர் ஆச்சு” என்று பூர்ணிமா சொன்னதும்.

‘தெரிஞ்சுருச்சா…. எல்லாம் தெரிஞ்சுருச்சா’ என்பது போல இருந்தது யுகேந்திரனின் மனநிலை. “சார், நா முதல் ரவுண்டில் பிக்பாஸ் வீட்டிற்காகவும், இரண்டாவது ரவுண்டில் ஸ்மால் பாஸ் வீட்டிற்காகவும் தான் விளையாண்டேன் ஆனா யாருக்காக விளையாண்டேன்னு எனக்கே தெரியல சார்.. “ என்று யுகேந்திரன் அழாத குறைதான்.

சாபக்கல்லின் பெயர் மாற்றம்

அடுத்ததாக சாபக்கல் மேட்டருக்கு வந்தார் கமல். “எனக்கு சாபம், விமோசனம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆகையால் இனி இதன் பெயர் தடைக்கல் என்று வைத்துக்கொள்வோம்” என்று, சாபக்கல்லுக்கு புது நாமகரணம் சூட்டினார்.

சாபக்கல்
சாபக்கல்முகநூல்

அத்தோடு இல்லாமல் கன்ஃபெஷன் ரூமில் இரண்டு டிரேயில் தடைக்கல் இருக்கிறது அதை எடுத்து வருமாறு கூறினார்.  கருங்கல்லுக்கு கருப்பு பெயிண்ட் பண்ணிய 32 கற்கள் இருந்தது. அதை ஆளுக்கு இரண்டு கற்களை தந்தவர், இதில் ”உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களுக்கு ஒரு கல்லும், அடுத்தவர் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களுக்கு ஒரு கல்லும் தருமாருங்கள் “ என்றார் கமல். சொல்லவா வேணும் அங்கு பூர்ணிமா, விஷ்ணுவை தவிர அனைவருக்கும் பிடிக்காத ஆளான மாயாவுக்கு தந்தனர். அவரிடம் மட்டும் 11 கல் வந்தது. அடுத்து ரவீனாவிடம் 5 கல் வந்தது, ”சரி அந்த தடைகற்களை அப்படியே எடுத்தது மாதிரி உள்ளே கொண்டுபோய் வச்சுடுங்க..” என்று கமல் சொன்னதும். எதுக்கு இந்த கல்விளையாட்டு? இது தெரிஞ்ச விஷயம் தானே… மாயான்னா எல்லோருக்கும் அலர்ஜிதான் இதில் கல்லைக்கொண்டு வேறு சொல்லணுமா என்று தோன்றியது.

கேப்டன் டாஸ்க்

அடுத்ததாக கேப்டன் டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா, நிக்ஸன், விஜய் இதில் கலந்துக்கொண்டார்கள். இதில் பூர்ணிமா வெற்றி பெறவே. அவரை இந்த வார கேப்டனாக தேர்வு செய்தனர். இது நிக்ஸனுக்கு பிடிக்கவில்லை.

 பூர்ணிமா
பூர்ணிமாமுகநூல்

உள்ளே வந்து மைக்கை தூக்கி போட்டவர். இனி நான் கேப்டன் பதவிக்கு நிக்கமாட்டேன். அதெப்படி பெண் கேப்டன் வேணும்னு விக்ரம் சொல்றது, வேணும்நா பொண்ணுகளே இங்க விளையாடட்டும் நாங்களெல்லாம் வீட்டுக்கு போயிடறோம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஹார்ட் அடாக்

கமல் ஸ்டிரைக்கார்டுடன் ஹார்ட் அட்டாக்கை சம்பந்தப்படுத்தி பேசினார். இந்த காலத்தில் இளைஞர்கள் பல பேருக்கு நிறைய ஹார்ட் அட்டாக் வருவதற்கு சரியான உறக்கமின்மை மற்றும் உணவு பழக்கவழக்கம் ஆகியவற்றால் வருவதாக கூறிய கமல் மறுபடி அகம் டீவி வழியாக வீட்டிற்குள் சென்றார்.

கூல் சுரேஷை வச்சு செய்த கமல்

எனக்கு 60 கண்ணு இருக்கு அதனால் நீங்கள் சொன்னது எல்லாத்தையும் பார்க்கவும் கேட்கவும் முடியும், மாயா நீங்க கூல் சுரேஷை பற்றி சொன்னது எனக்கு கேட்டுடுச்சு… அவர்கிட்ட என்ன குறை உங்களுக்கு…”

“அவரு ஜோக் அடிக்கறேன்னு சொல்லிட்டு எல்லோரையும் அசிங்கப்படுத்தறாரு. விசித்திரா அம்மாவ பார்த்து சொன்னதெல்லாம் எனக்கு பிடிக்கல சாரே….”என்றார்

கூல் சுரேஷை பற்றி யார் யாரெல்லாம் கருத்து தெரிவிக்கிறீங்க… என்று கேட்டதும், அனைவரும் அவரவர் கருத்தை கூறினர். நிக்சன் எழுந்து கூல்க்கு சப்போர்ட் செய்வது போல அவர் பேசியது தப்புன்னு சொல்லவும், “நிக்சன் நீயுமாடா…” என்பது போல பரிதாப பார்வையை நிக்சன் மீது வீசினார் கூல்.

விசித்திரா சொல்லும்பொழுது, “ கூல் சுரேஷ் என்னை பேசியதற்கு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டார், அது மன்னிப்பு மாதிரி தெரியலை”-னு சொல்லவும்,

“ஆமா… நீங்க சொல்றதும்  சரிதான் மன்னிப்பு கேட்பதில் ரெண்டு வகை இருக்கு, பண்ற தப்பை பண்ணிட்டு படால்னு தரையில விழுந்து மன்னிப்பு கேட்பது, மறுபடி பண்ற தப்ப பண்ணுவது…. மன்னிப்பு எப்படி கேட்கணும்னா கண்ணோடு கண் பார்த்து கேட்கணும் அது தான் மன்னிப்பு” என்றதும் அரங்கம் கை தட்டியது.

கமல் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஒரு வைரலான நாய் வீடியோ பார்த்துவிட்டு வந்திருப்பார் போல… “ நாய் தலகாணி கிழிச்சுச்சுன்னா, அதோட கண்ணப்பார்த்தா போதும் அது பம்மிட்டு கட்டிலுக்கு அடியில போய்டும்” என்றார்.

’கூல் ரேஷ் நீங்க செய்வது காமெடியே அல்ல’… அது மொக்கை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் கமல். அதோடு விட்டாரா கமல், பூர்ணிமாவிடம் உங்க பங்குக்கு நீங்க சொல்லுங்க… என்றதும், “நானும் அண்ணாவிடம் சொல்லிட்டேன் அவரு கேட்கல…”

ஐஷு சொல்லும்போது, ”அவரு என்னையும் நீ பூசினமாதிரி கொழுகொழு…. மொழுமொழுன்னு இருக்கன்னு சொன்னாரு… அது பிடிக்கல… படத்துல சொன்னா மட்டும் ஜோக்குன்னு சிரிக்கிறீங்க… நா சொன்னா மட்டும் அது ஜோக் இல்லையான்னு கேட்கறாரு” என்றார்.

“படத்துல இது மாதிரி ஜோக் வந்தா பாதி பேரு படத்துக்கு வரமாட்டாங்க… யாரையும் உருவகேலி செய்வது தப்பு. காந்திக்கும் தலைல வழுக்கை உண்டு அதனால அவர உருவ கேலி செய்வோமா?. ” என்றார்.

இத இப்படியே விட்டா, நம்மள நாறடிச்சுடுவாங்க என்று நினைத்த கூல் “நன்றி சார் எனக்கு புத்தி சொன்னதுக்கு நன்றி சார்” என்ற சுரெஷின் டோன், “நீ என்ன என்னக்கு அட்வைஸ் பண்றது, நா தமிழண்டா வார்த்தையை வைத்து பொழச்சுக்குவேன்னு சொல்லாம சொன்னரு.

சொந்தகதை, சோகக்கதை

அடுத்த பாயிண்ட்க்கு வந்த கமல், “எல்லாரும் சொந்த கதை சொல்லும் போது ஏன் பஸ்ஸர அடிக்கல…”னு கேட்டாரு.

பஸ்ஸர் அடிக்க தோணல…எல்லார் கதையும் கேட்க நல்லா இருந்தது, அதனால சொல்லட்டும்னு விட்டுட்டோம் என்றே பெரும்பாலோரின் பதிலாக இருந்தது.

Cool Suresh
பிக்பாஸ் 7: ’நீங்க கண்டிஷனை சரியா படிக்கல’.. டாஸ்கை நினைவில் வைத்து கமல் சூசகமாக சொன்ன ஒரு செய்தி!

விஜய்யின் அடாவடிதனம்

அடுத்து வந்த ஆக்ஸிஜன் டாஸ்க் பற்றி பிரதீப் பேசும் பொழுது, ”விஜய் என்னை தூக்கி போட்டது பற்றி நா பெருசா எடுத்துக்கல.  தூக்கிபோட்டுட்டு போடான்னு விட்டுட்டேன். அவ நல்ல பையன் தான் இதனால நீங்க அவன எவிக்சன் பண்ணினாலும் பண்ணிக்கோங்க….” என்ற டோனில் இருந்தது.

 நிக்சன் எழுந்து, யார் கையிலும் பாட்டில் இல்ல… ஆனா எதுக்கு கட்டி உருண்டாங்கன்னு தெரியல சார்” … என்றார்

பூர்ணிமா பேசும்பொழுது, “மணி என்னை தள்ளிவிட்டார், நா தனியா எப்படி விழுறது? அதனால துனையாக ரவீனாயையும் சேர்த்துபிடிச்சு விழுந்தேன் என்றார்.

எவிக்ஷனில் வெளியேறிய விஜய்

அடுத்ததாக எவிக்‌ஷன் பிராஸஸ் நடந்தது.  வினுஷா தான் எவிக்‌ஷன் ஆவாங்க என்று எல்லோரும் கோரஸா சொன்னதும், கமல் விக்ரம் கார்டை எடுத்து காட்டினார். விக்ரம் அதிர்சியடைந்தார். ஆனால் கூலாக சென்றுவிட்டார்.

புத்தக பரிந்துரை

”இந்த வாரம் கமல் செய்த புத்தகத்தின் பெயர் இக்கி க்கை  இது தமிழ் ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழியிலும் இருக்கிறது. இதை எழுதியவர் ஃபிரான்ஸஸ் மிராய்ஸ், ஹெக்டர் க்ராஸியா என்ற இருவர் எழுதியது. இப்புத்தகம் ஸ்பெயினில் உள்ள ஒக்கினோவா என்ற தீவில் உலகத்திலேய அதிகளவு வயதுடையவர்கள் அங்கு அதிகமாக வசிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை பற்றிய புத்தகம் இது என்கிறார். வாங்கலாம், படிக்கலாம்.

36 வருடம் நாயகன் நிறைவு பெறுவதை ஒட்டி மணிரத்தினம் டீசரை 7ம் தேதி நவம்பர் வெளியிடப்படும்” என்று சொல்லி கமல் சென்றார்.

இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்பவர்கள்

மணி, யுகேந்திரன், ஜோவிகா, நிக்சன், பிரதீப், அக்‌ஷயா இவர்கள் அனைவரும் இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றனர். இனி ஸ்மால் பாஸ் வீட்டில் என்ன நடக்க இருக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com