சைக்கிள் ரைடு- கருப்பு கலர் டி-ஷர்ட்டில் அஜித்; வைரல் புகைப்படங்கள்

சைக்கிள் ரைடு- கருப்பு கலர் டி-ஷர்ட்டில் அஜித்; வைரல் புகைப்படங்கள்

சைக்கிள் ரைடு- கருப்பு கலர் டி-ஷர்ட்டில் அஜித்; வைரல் புகைப்படங்கள்
Published on

நடிகர் அஜித் சைக்கிளிங் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித். நடிப்பு மட்டுமன்றி பைக் ரேஸ், ஏரோ மாடலிங், போட்டோகிராபி, சமையல் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தி வரும் அவர், கடந்த சில வருடங்களாக துப்பாக்கிச் சுடுதலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் கூட துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் இவர் ஈடுபடும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில் தற்போது அஜித் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com