\
விஜய் - பாரதிராஜா
விஜய் - பாரதிராஜாweb

’என் படத்துலதான் நடிப்பேன்னு வந்தான்’ - விஜயை நிராகரித்த பாரதிராஜா! என்ன நடந்தது?

என்னுடைய திரைப்படத்தில் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விஜயை நான் திருப்பி அனுப்பிவிட்டேன் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
Published on
Summary

தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, ராதிகா முதல் சுகன்யா, நெப்போலியன் வரை பலரின் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர். வைரமுத்து, கங்கைஅமரன் போன்ற பாடலாசிரியர்களையும், ஒளிப்பதிவாளர் நிவாஸையும் அறிமுகப்படுத்திய அவர், ஒருகாலத்தில் தனது நெருங்கிய நண்பர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜயை ரிஜக்ட் செய்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

மறைந்த பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தியபோது கவிஞர் வைரமுத்து, ‘ஆகாயத்துக்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா’ என்றார். அது உண்மைதான். தமிழ்த் திரைப்பட உலகில் அதிக நடிகர்களையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய இயக்குநர்களில் பாரதிராஜா முக்கியமானவர்.

பாக்யராஜ், பாரதிராஜா, ராதிகா
பாக்யராஜ், பாரதிராஜா, ராதிகா

ராதிகா, சுதாகர், பாக்யராஜ், ரதி, கார்த்திக், ராதா, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, சந்திரசேகர், பாண்டியன், ரஞ்சனி, ரேவதி, ரேகா, ராஜா, பாபு, சுகன்யா, நெப்போலியன், ரஞ்சிதா, மனோஜ், ரியா சென், பிரியா மணி என்று பலரின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது பாரதிராஜா தான். அதேபோல சத்யராஜ் ஏற்கெனவே வில்லன் நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் 1986இல் கடலோரக் கவிதைகள் படத்தில் அவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தது பாரதிராஜாதான்.

பாரதிராஜா - வைரமுத்து
பாரதிராஜா - வைரமுத்துvairamuthu

அது மட்டுமல்லாமல் வைரமுத்து, கங்கைஅமரன் போன்றவர்களை பாடலாசிரியராக அறிமுகம் செய்தது முதல், ஒளிப்பதிவாளர் நிவாஸைத் தமிழில் அறிமுகம் செய்தது வரை பல நட்சத்திரங்களை பாரதிராஜா உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் தான் பாரதிராஜா படத்தில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசையுடன் வந்த விஜயை ரிஜக்ட் செய்து திருப்பி அனுப்பியதாக உரையாடல் ஒன்றில் பகிர்ந்திருந்தார் பாரதிராஜா.

விஜய் - பாரதிராஜா
"அவ கையால ஒரு கப் காபி.. அவ்ளோ தான் வாழ்க்கை" - பராதிராஜா எமோஷனலாக பதிர்ந்த காதல் கதை

விஜயை நிராகரித்த பாரதிராஜா..

நேர்காணல் ஒன்றில் பேசிய பாரதிராஜா, ”என்னுடைய சமகால இயக்குநர்களில் எஸ்.ஏ.சந்திரசேகர் மிகவும் நெருக்கமான நண்பர். ஒருமுறை அவருடைய மகன் விஜயை அழைத்துக்கொண்டு என்னிடம் வந்தார், இவன் உன் படத்துல தான் நடிக்கணும்னு சொல்றான், ஒரு கிராமத்து படத்துலனு சொன்னார். என்னமோ எனக்கு அப்போது அந்த பையனிடம் எதுவும் தோணவில்லை, ஏன் உன்னோட படத்துல நடிக்க வைக்கவேண்டியது தானே என சொல்லி விஜயை ரிஜக்ட் செய்து அனுப்பி வைத்துவிட்டேன். ஆனா அவன் தான் இன்னைக்கு நம்பர் 1 நடிகர், விஜயிடமே நான் சொன்னேன் டேய் உன்ன நான் ரிஜக்ட் பண்ணிட்டன்டானு, அதற்கு அவன் இப்போவும் எனக்கு மைண்ட்லயே இருக்கு சார்னு சொன்னான்” என பகிர்ந்து கொண்டுள்ளார்.

விஜய் - பாரதிராஜா
அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் பாரதிராஜா உடல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com