ராதிகா - பாரதிராஜா
ராதிகா - பாரதிராஜாweb

”உனக்கு National Award கிடைக்கணும்..” ராதிகாவிடம் சொன்ன பாரதிராஜா!

தாய் கிழவி படத்திற்காக ராதிகாவிற்கு தேசிய விருது கிடைக்கணும் என பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on
Summary

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக நீண்டநாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார். தாய் கிழவி படத்தில் நடித்த தனது சிஷ்யை ராதிகாவை பார்த்து மகிழ்ந்த பாரதிராஜா, அவரது நடிப்பை பாராட்டி ‘உனக்கு தேசிய விருது கிடைக்கணும்’ என்று ஆசீர்வதித்தது நெகிழ்ச்சிகரமான தருணமாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பி தற்போது உடல்நலம் தேறிவருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் தீவிரமாக நடித்து வந்த பாரதிராஜா, தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் அகால மரணத்திற்குப் பிறகு மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளானார். மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் முற்றிலுமாக முடங்கிப் போன அவர், சில மாதங்கள் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.

Bharathiraja
Bharathiraja

கடந்த டிசம்பர் இறுதியில் சென்னை திரும்பிய அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நிபுணர் குழுவின் கண்காணிப்பில் இருந்ததற்கு பின் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தாய் கிழவி திரைப்படத்தில் நடித்திருந்த பாரதிராஜாவின் சிஷ்யை ராதிகா, அவரை சேரில் சென்று பார்த்து வாழ்த்து பெற்றுள்ளார்.

ராதிகா - பாரதிராஜா
”சாதி வேண்டாம் எனச் சொல்லும் படங்களே சாதிய படங்கள்” - வெற்றிமாறன் | Vetrimaaran | Vaanam

உனக்கு தேசிய விருது கிடைக்கணும்..

பாரதிராஜாவால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதிகா, தாய் கிழவி படத்தில் நடித்ததற்குபின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ராதிகா நடிப்பில் வெளியாகி வெற்றித்திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'தாய்க்கிழவி' திரைப்படத்தைப் பாரதிராஜா பார்த்துள்ளார். படத்தில் ராதிகாவின் எதார்த்தமான நடிப்பைக் கண்டு வியந்த பாரதிராஜா, ’உனக்கு தேசிய விருது கிடைக்கணும்’ அவரை பாராட்டினார்.

தனது 'குரு' கையால் ஆசி பெற்றதோடு, பாராட்டுக்களையும் பெற்றது குறித்து ராதிகா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் ராதிகாவைத் திரைத்துறைக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் இவர்களது குரு-சிஷ்யை உறவு திரையுலகினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா - பாரதிராஜா
"என் `ஜக்குபாய்' முழுப் படமும் இணையத்தில் வெளியானபோது" - கே.எஸ்.ரவிக்குமார் ஆதங்கம் | Jaggubhai

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com