\
Avengers: endgame  & Avatar
Avengers: endgame & AvatarInstagram

28ஆயிரம் கோடி வசூல்.! Avatar-ஐ வீழ்த்திய Avengers Endgame.. உலக பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் Number 1!

Avengers Endgame மீண்டும் உலக வசூல் சாம்பியனாக மாறி, முதலிடத்திலிருந்த Avatar-ஐ பின்னுக்குத் தள்ளியது!
Published on: 
Summary

Avengers: Endgame திரைப்படம் உலகளவில் $2.925 பில்லியன் வசூலித்து, Avatar படத்தை மீண்டும் பின்னுக்குத் தள்ளி அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. Marvel ரசிகர்களுக்கு இது பெரிய கொண்டாட்டமாக மாறியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

ஹாலிவுட் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை Avengers: Endgame மீண்டும் கைப்பற்றியுள்ளது. சமீபத்திய திரையரங்கு மறுவெளியீட்டுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு வெளியான Avatar படத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Avengers: Endgame திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 2.925 பில்லியன் (ரூ.28165 கோடி) டாலர் வசூல் செய்துள்ளது. அதே நேரத்தில், ஜேம்ஸ் கேமரூனின் Avatar திரைப்படம் சுமார் 2.923 பில்லியன் (ரூ.28148 கோடி) டாலர் வசூலித்தது. இதனால் இரு படங்களுக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருந்துவந்தது.

Avengers endgame
Avengers endgame Reuters

இரண்டு படங்களும் கடந்த சில ஆண்டுகளாக உலகின் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற முதலிடத்தை மாறி மாறி பிடித்து வருகின்றன. Avatar திரைப்படம் 2009ஆம் ஆண்டு வெளியானபோது மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அந்த சாதனை அதன் வசமே இருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு Avengers: Endgame வெளியானபோது, Avatar-ன் சாதனையை முறியடித்து உலகின் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது.

இதையடுத்து 2021ஆம் ஆண்டு Avatar மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. அதன் மூலம் அந்த படம் மீண்டும் Endgame-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தது. குறிப்பாக Avatar: The Way of Water படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக இந்த மறுவெளியீடு நடைபெற்றது.

இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மீண்டும் மாறியுள்ளது. Disney வெளியிட்ட Avengers: Endgame மறுவெளியீடு, படத்தின் உலகளாவிய வசூலை மேலும் அதிகரித்துள்ளது.

avatar
avatarinstagram

இதன் மூலம் Avengers: Endgame – $2.925 பில்லியன் டாலர்களையும், Avatar – $2.923 பில்லியன் டாலர்களையும் வசூல் செய்துள்ளது. இதில் Endgame மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் Marvel ரசிகர்களுக்கு இது மீண்டும் ஒரு பெரிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. Avatar மற்றும் Avengers: Endgame படங்களுக்கு இடையிலான இந்த வசூல் போட்டி, ஹாலிவுட்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் போட்டிகளில் ஒன்றாக தொடர்ந்து வருகிறது.

Avengers: endgame  & Avatar
அடேங்கப்பா..! இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலா? ஹாலிவுட்டையே திரும்பி பார்க்கவைத்த Spider Man!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com