\
Spider-Man: Brand New Day
Spider-Man: Brand New Dayimdb

அடேங்கப்பா..! இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலா? ஹாலிவுட்டையே திரும்பி பார்க்கவைத்த Spider Man!

இந்திய பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ.500 கோடி வசூல் சாதனை படைத்து மிரட்டியுள்ளது சமீபத்தில் ரிலீஸான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம்.
Published on: 
Summary

இந்தியாவில் ரூ.500 கோடி வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற பெருமையை 'Spider-Man: Brand New Day' பெற்றுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியாவில் வசூல் செய்வது புதிதல்ல. ஆனால், தற்போது வெளியான ‘Spider-Man: Brand New Day இந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தியாவில் ரூ.500 கோடி நிகர வசூலை கடந்த முதல் ஹாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spider-Man: Brand New Day
Spider-Man: Brand New Dayreuters

டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, ‘Avengers endgame’ படத்துக்குப் பிறகு சில மார்வெல் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவராத நிலையில், ‘Spider-Man: Brand New Day ’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Spider-Man: Brand New Day
’அபூர்வ சகோதரர்கள் to லிட்டில் ஜான்..’ புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் ரூ.334.75 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தில் ரூ.108.65 கோடியும், மூன்றாவது வாரத்தில் ரூ.32 கோடியும் வசூலித்துள்ளது.

அடுத்தடுத்த வாரங்களில் வசூல் சற்று குறைந்தாலும், திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்கள் வந்ததால் ஏழு வாரங்களின் முடிவில் இந்தியாவில் சுமார் ரூ.500 கோடி நிகர வசூலையும், ரூ.598 கோடி மொத்த வசூலையும் படம் பெற்றுள்ளது.

Spider-Man: Brand New Day
Spider-Man: Brand New Dayreuters

மொழிவாரியாக பார்க்கும்போது, ஆங்கிலப் பதிப்பு சுமார் ரூ.276 கோடியும், இந்தி டப்பிங் பதிப்பு ரூ.181 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளது. தமிழில் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இதற்கு முன்பு இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படங்களான ‘Avatar: The Way of Water’, ‘Avengers: Endgame’, ‘Avengers: Infinity War’, ‘Spider-Man: No Way Home ஆகியவற்றின் வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Spider-Man: Brand New Day
₹330 கோடி வசூல்.. “எனக்கு அதில் பாதி கூட கிடைக்காது” – ஃபஹத் பாசில் ஓபன் டாக்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com