Jawan Prevue
Jawan PrevueTwitter

“இது வெறும் ஆரம்பம்தான்...” - ஷாருக்கான், அட்லீயின் ‘ஜவான்’ படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு!

பிரியா மணி மற்றும் நயன்தாராவும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளனர்.
Published on

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் அட்லீ, பின்னர் விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றி படங்களை தந்ததையடுத்து, தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜவான்’ படம், இயக்குநர் அட்லீ மற்றும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் அறிமுகப் படம் என்பதால் ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Jawan Prevue
Jawan PrevueTwitter

இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் பேக்கில், இப்படம் உருவாகியுள்ளது போன்று தெரிகிறது. மகளிர் ஜெயிலில் ஆரம்பிக்கும் முன்னோட்ட வீடியோ, இந்திய விமானப் படையில் ஷாருக்கான் பணி செய்வது போன்றும், மற்றொரு இடத்தில் வில்லன் போன்றும் வருகிறார். பிரியா மணி மற்றும் நயன்தாராவும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளனர்.

ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com