ஜவான் படத்தின் அந்த ஒற்றைக் காட்சி; ஹாலிவுட்டில் இருந்து அட்லீக்கு வந்த அழைப்பு!

“ஹாலிவுட்டில் பணியாற்ற விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்றனர். இந்த ஐடியா இங்கு மட்டுமே செயல்படும் என நினைத்தேன், உலகளவில் இது வேலை செய்கிறது" என்று நெகிழ்ச்சியாக கூறினார் அட்லீ.
ஷாருக்கான், அட்லீ
ஷாருக்கான், அட்லீfile image

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு இந்த வருடம் மிகவும் சாதகமான ஒன்றாக மாறியிருக்கிறது. குடியரசுத் தினத்தையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் திரைப்படமும், அட்லி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படமும் பாலிவுட் உலகையே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வைத்துள்ளது.

Jawan
Atlee
ShahRukhKhan
Jawan Atlee ShahRukhKhan

பதான் திரைப்படம் ரூ.543 கோடியை வசூலித்த நிலையில் ஜவான் திரைப்படமோ ரூ.1000 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உலகளவில் ஜவான் திரைப்படம் ரூ.1004.92 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் ஷாருக்கானின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.

இந்நிலையில் திரைப்படத்தின் இயக்குநர் அட்லீ ஓரிரு தினங்கள் முன் Film Companion யூ டியூப் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தனக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஹாலிவுட்டைச் சேர்ந்த சண்டைப் பயிற்சியாளர் ஸ்பிரோ ரசாடோஸ் எங்களுடன் பணியாற்றினார். ஸ்பைரோ ஹாலிவுட்டைச் சேர்ந்த பிற இயக்குநர்கள் மற்றும் தொழிழ்நுட்பக் கலைஞர்களுடன் ஜவான் திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அந்த ஸ்டண்ட் குறித்து அவர்கள் கேட்ட போது அந்த ஐடியா என்னுடையது என சொல்லியுள்ளார். (விக்ரம் ரத்தோர் கிராமத்தை காப்பாற்றும் காட்சி) இதனை அடுத்து எனக்கு அழைப்பு வந்தது. ஹாலிவுட்டில் பணியாற்ற விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்றனர். இந்த ஐடியா இங்கு மட்டுமே செயல்படும் என நினைத்தேன், உலகளவில் இது வேலை செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com