\
67 வயதாகும் இந்த அனுபம் கெர்ரைப் பார்த்தா... வாவ்!

67 வயதாகும் இந்த அனுபம் கெர்ரைப் பார்த்தா... வாவ்!

67 வயதாகும் இந்த அனுபம் கெர்ரைப் பார்த்தா... வாவ்!
Published on: 

67 வயதிலும் நடிகர் அனுபம் கெர், ஸ்டைலிஷாகவும், ஃபிட்டாகவும் இருந்து இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார்.

சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்ற அனுபம் கெர், இந்தியில் 500-க்கும்  மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி, அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

அனுபம் கெர் நடித்துள்ள இந்தி திரைப்படமான  'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வரும் மார்ச் 11ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இதனிடையே அனுபம் கெர் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 67 வயதிலும் நடிகர் அனுபம் கெர், தனது உடலை ஸ்டைலிஷாகவும், ஃபிட்டாகவும் வைத்து இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார்.

இதையும் படிக்க: மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா: அசத்தலாக அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்