\
'புதுசா யாருமா கத சொல்றா’ - காமெடி, த்ரில்லரில் மிரட்டும் அனபெல சேதுபதி டிரைலர்!

'புதுசா யாருமா கத சொல்றா’ - காமெடி, த்ரில்லரில் மிரட்டும் அனபெல சேதுபதி டிரைலர்!

'புதுசா யாருமா கத சொல்றா’ - காமெடி, த்ரில்லரில் மிரட்டும் அனபெல சேதுபதி டிரைலர்!
Published on

விஜய்சேதுபதி, டாப்ஸி நடிக்கும் அனபெல சேதுபதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் அனபெல சேதுபதி. டாப்ஸி, ராதிகா, யோகிபாபு ஆகியோர் நடிக்கும் இந்த படத்தை பேஸன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், ராதிகா, தேவதர்ஷினி, மதுமிதா, சேத்தன், சுப்பு பஞ்சு, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு டாப்ஸி தமிழில் நடிக்கிறார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் உருவான ட்ரெண்ட் ஆன பேய் படங்களுக்கான டெம்பிளேட்டாக உள்ள ஒரு அரண்மனையில் பேய் இருக்கு என்பதே இந்தப் படத்திலும் இருக்கிறது. வித்தியாசமான என்ன செய்திருக்கிறார்கள் என்பதே சவாலாக இருக்கும். படத்தில் டாப்ஸி தான் முக்கியமான கதாபாத்திரம் போல் உள்ளது. யோகி பாபுவின் காமெடி ட்ராக் ட்ரெய்லர் முழுவதும் வருகிறது. இந்தப் படம் காமெடி மற்றும் த்ரில்லர் வகையில் இருக்கும் என்றே தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com