
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ’2.0’ படத்தில் நடிக்கிறார் எமி ஜாக்சன். இதில் இவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இதையடுத்து அவர் ஆங்கில படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கேரக்டருக்காக, உடல் எடை கூடுகிறார். தற்போது இருக்கும் எடையை விட பத்து கிலோ அதிகரிக்க வேண்டும் என்பதால் டயட்டையும் உடற்பயிற்சியையும் விட்டுவிட்டார் எமி.
‘உடல் எடையை கூட்டுவதில் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால், என் உடல் அவ்வளவு ஈசியாக ஏறாது என்பதில்தான் சிக்கல். இதற்கு முன் இப்படி நான் செய்ததில்லை’என்கிறார் எமி.