\
Ajith’s ‘Gladiators’ Documentary Trailer Released Online
GladiatorsGladiators

இணையத்தில் வெளியானது அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ரசிகர்கள் வரவேற்பு!!

திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குப் பிறகு இணையத்தில் வெளியாகியிருக்கிறது நடிகரும் ரேசருமான அஜித்தின் ’கிளேடியேட்டர்ஸ்’ ஆவணப்பட டிரெய்லர்.
Published on

சினிமாவைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித் குமார், சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அவரது இந்த சவால்கள் நிறைந்த ரேசிங் பயணத்தையும், பந்தயக் களத்தில் அவர் எதிர்கொண்ட அனுபவங்களையும் பதிவு செய்யும் வகையில் 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார், தனது கோல்டன் டிராபி ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், எடிட்டராக ஆண்டனி பணியாற்றியுள்ளார்.

Ajith
AjithGladiators

இந்தச்சூழலில் தான், இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதையடுத்து, 2 வாரங்களுக்கு பிறகு படக்குழுவினர் டிரெய்லரை தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கின்றனர். 3 நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 

இந்த டிரெய்லரில், அஜித், அவரது மனைவி ஷாலினி, மகன் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் அஜித்தின் மேலாளர் உள்ளிட்ட பலரும் அஜித்தின் ரேசிங் வாழ்க்கை குறித்தான பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கின்றனர்.

Ajith’s ‘Gladiators’ Documentary Trailer Released Online
மீண்டும் திரைக்கு வரும் ’Avengers: Endgame’.. Marvel ரசிகர்களுக்கு செம Surprise! என்ன ஸ்பெஷல்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com