\
“அஜித் ஒரு ஜென்டில்மேன்” - லஷ்மிமேனன்

“அஜித் ஒரு ஜென்டில்மேன்” - லஷ்மிமேனன்

“அஜித் ஒரு ஜென்டில்மேன்” - லஷ்மிமேனன்
Published on: 

நடிகை லஷ்மி மேனன் சினிமாவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகின்றன. வேதாளம் படத்தில் அஜித்குமாருடன் சேர்ந்து நடித்தது பற்றி நினைவுகூர்ந்துள்ள அவர், மிகவும் பிடித்த படம் அதுவென்று உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

"அஜித்துடன் நடிப்பது என் கனவு. என் ஹீரோ அஜித்துடன் நடிப்பதற்கு மிகப்பெரும் வாய்ப்பளித்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அஜித் ஒரு ஜென்டில்மேன். வேதாளம் எனக்கு மிகவும் பிடித்த படம் " என்றும் பதிவிட்டுள்ளார். வேதாளம் படத்தில் லஷ்மிமேனன் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருந்தார்.

சிறுத்தை சிவா இயக்கிய ஆக்சன் படமான வேதாளம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி பெற்றது. தன் 16 வயதில் தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். அதில் அவர் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டார்.

லஷ்மி மேனன் கடைசியாக விஜய்சேதுபதியுடன் ரெக்க படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் முத்தையாவின் அடுத்த படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com