\
காயங்களை கூட பொருட்படுத்தாமல் அஜித் உழைக்கிறார்; அப்டேட் வரும்வரை காத்திருங்கள் - மேலாளர்

காயங்களை கூட பொருட்படுத்தாமல் அஜித் உழைக்கிறார்; அப்டேட் வரும்வரை காத்திருங்கள் - மேலாளர்

காயங்களை கூட பொருட்படுத்தாமல் அஜித் உழைக்கிறார்; அப்டேட் வரும்வரை காத்திருங்கள் - மேலாளர்
Published on

வலிமை படத்தின் அடுத்த அப்டேட் வரும் வரை காத்திருங்கள் என அஜித் மேலாளர் கூறியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விளக்கமளித்த தயாரிப்பாளர் நிறுவனம், மாஸ்டர் படத்தை திரையரங்கிலேயே வெளியிட விரும்புவதாக கூறியது. இதனைத்தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து புச்சி பாடல் வெளியானது, இதனிடையே சூர்யா கெளதம் மேனன், பிசி ஸ்ரீராம் இணையும் படம் என அனைத்து கதாநாயகர்களின் ரசிகர்களுக்கும் அப்டேட் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனுடன் நடிகர் விஜய் இணைகிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் சம்பந்தமான அப்டேட் மட்டும் வந்த பாடில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட் குறித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இதற்கு பதில் தரும் வகையில் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு .. படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார், போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து “வலிமை” படத்தின் update குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையாக அறிவிக்கும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு கொடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com