“நான் ரெடி” - செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா! எந்த படத்தின் இரண்டாம் பாகம் தெரியுமா?

‘ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே’ குறித்து 2013 ஆம் ஆண்டு எக்ஸ் வலைதளத்தில் உள்ள செல்வராகவன் பதிவிற்கு ‘நான் ரெடி’ என 10 ஆண்டுகளுக்கு பிறகு ரிப்ளை கொடுத்துள்ளார் நடிகை த்ரிஷா!
trisha, selvaraghavan
trisha, selvaraghavanpt web

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’. வெங்கடேஷ், த்ரிஷா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடத்திருந்தார்கள். தெலுங்கில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல திரையரங்குகளில் நூறு நாட்களை கடந்து ஓடியது.

இந்தத் திரைப்படம் தமிழில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளிவந்தது. தமிழிலும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகம். ரகுவரன் நடித்த கடைசி படம் அது.

Aadavari Matalaku Ardhale Verule
Aadavari Matalaku Ardhale Verule

ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே’ படம் குறித்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ட்விட்டரில் செல்வராகவன் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில், “‘ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே’ படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா உடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணமில்லை” என அதில் செல்வராகவன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் த்ரிஷா அந்த ட்விட்டை டேக் செய்து ’நான் ரெடி செல்வராகவன்’ என ட்விட் செய்துள்ளார். 2013ல் போட்ட பதிவிற்கு 10 வருடங்கள் கழித்து த்ரிஷா ரிப்ளை செய்ததை குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com