actress trisha shared sad message
த்ரிஷாஎக்ஸ் தளம்

”என் மகன் உயிரிழந்துவிட்டான்.. ஆகையால்” - துயரச் செய்தியைப் பகிர்ந்த நடிகை த்ரிஷா!

நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளங்களில் துயரச் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. தற்போது அவர், நடிகர் அஜித் குமாருடன் ’விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படம், வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுதவிர, அவர் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளங்களில் துயரச் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவருடைய அந்தப் பதிவில், "என் மகன் சோரோ இன்று கிறிஸ்துமஸ் காலைப்பொழுதில் உயிரிழந்துவிட்டான். என்னை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு இனி என் வாழ்க்கை ஒருதுளி அர்த்தமும் இல்லாத ஒன்று என்பது நன்கு தெரியும். நானும் என் குடும்பத்தாரும் உடைந்துவிட்டோம். நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். இதனால் சிறிது காலம் பணியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளவிருக்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து பயனர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலரும் ஆறுதலாய்ப் பதிவிட்டு வருகின்றனர்.

actress trisha shared sad message
Top 10 சினிமா செய்திகள் | டப்பிங் பணிகளை முடித்த சசிகுமார் To மருதமலை முருகன் கோயிலில் த்ரிஷா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com