அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி மனைவி ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ்!

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது மனைவி ஷாலினி விலை உயர்ந்த பைக்கை பரிசளித்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
அஜித்குமார் - ஷாலினி
அஜித்குமார் - ஷாலினி முகநூல்

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது மனைவி ஷாலினி விலை உயர்ந்த பைக்கை பரிசளித்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.

நடிகர் அஜித்குமார் தனது 53வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடினர். அவர் நடித்த பழைய படங்களான தீனா, பில்லா ஆகியவை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், திரையரங்குகளை அஜித் ரசிகர்கள் விழாக்கோலமாக்கினர்.

இந்நிலையில்,தனது கணவரின் பிறந்தநாளையொட்டி ஷாலினி, அஜித்துக்கு பிடித்த டுகாட்டி பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பைக்கின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டார். அதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வைரலாக்கினர்.

அஜித்குமார் - ஷாலினி
மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள் | மருமகளிடம் வேலைக்காரியாக நடிக்கும் மாமியாராக ‘அவர்கள்’ லீலாவதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com