”வடஇந்திய தயாரிப்பாளர்கள் தன்னைக் கவர்ச்சியாக நடிக்க வைக்கின்றனர்” - நடிகை பூஜா ஹெக்டே
மாடலிங் துறை மூலம் கால்பதித்த பூஜா ஹெக்டே, தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மோனிகா என்ற பாடலில் தோன்றுகிறார். இந்த பாடல் பார்வையாளர்களிடையே வைரலாகி வருகிறது. முன்னதாக, கார்த்திக் சுப்பராஜின் ’ரெட்ரோ’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதில் அவர், “வட இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தன்னை கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலேயே நடிக்க வைக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அதில் அவர், “வட இந்தியாவில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் என்னைக் கவர்ச்சியான வேடங்களுக்கு மட்டுமே அழைக்கிறார்கள். தென்னிந்தியாவில் நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் நான் பல்வேறு வகையான வேடங்களில் நடித்து முன்னேறுவதற்கு முயல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.