ஹீரோயினை அழகாக காட்டுங்கள்: பூஜா ஹெக்டே ஆசை

ஹீரோயினை அழகாக காட்டுங்கள்: பூஜா ஹெக்டே ஆசை

ஹீரோயினை அழகாக காட்டுங்கள்: பூஜா ஹெக்டே ஆசை
Published on

ஹீரோயினை அழகாக காட்டுங்கள் என்று கேமிராமேன் ரவி.கே.சந்திரனுக்கு நடிகை பூஜா ஹெக்டே கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் சினிமா தவிர்க்க முடியாத சினிமாட்டோகிராஃபர் ரவி.கே.சந்திரன். அவருக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறிய பூஜா ஹெக்டே, “பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தாண்டில் இருந்து உங்களின் ஹீரோயின்களை மேலும் அழகாக காட்டுங்கள். அப்புறம் ஹீரோக்களை ஹேண்ட்ஸமாக காட்டுங்கள். பிறந்த நாளான இன்று அளவுக்கதிகமாக கேக் சாப்பிடுங்கள். விரைவில் உங்களோடு ஷூட்டிங்கில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரியதர்சன், மணிரத்னம், ராஜீவ் மேனன், சஞ்சய் லீலா பன்சாலி, ஏ. ஆர். முருகதாஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து ரவி.கே. சந்திரன் பணியாற்றியுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்காக இரண்டு முறை பிலிம்பேர் விருதையும் ஒருமுறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். ஜீவா, துளசி நாயர் நடித்த யான் திரைப்படத்தை இயக்கியவர் இவர். மின்சார கனவு, ஆயுத எழுத்து, ஏழாம் அறிவு, கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ் உட்பட பல படங்களில் பணியாற்றியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com