காதல் கோட்டை பட இயக்குநர் அகத்தியனை நெகிழச் செய்த நடிகை தேவயானி!
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் புதிய ரெஸ்டாரண்டை திறந்து வைக்க நடிகை தேவயானி இன்று வருகை தந்தார். புதிய ரெஸ்டாரண்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கும் ஏற்றி வைத்தார்.
இதனிடையே, தன்னை சினிமாவில் பிரபலம் அடைய வைத்த திரைப்படமான ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் இயக்குநர் அகத்தியனின் சொந்த ஊர் பேராவூரணி என்பது அவருக்குத் தெரியவந்தது.
அகத்தியன் சென்னையில் வசித்து வரும் நிலையில், அகத்தியனின் பூர்வீக வீடு எங்கே உள்ளது என அங்கிருந்தவர்களிடம் விசாரித்து அங்கு சென்று இயக்குநர் அகத்தியனின் சகோதரியை சந்தித்து நலம் விசாரித்தார்.
தேவையானி தனது வீட்டிற்குச் சென்று தனது சகோதரியை சந்தித்த நிகழ்வு டைரக்டர் அகத்தியனுக்கு தெரியவர, இது பற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகத்தியனிடம் கேட்டோம். அப்போது பேசிய அவர், “சினிமாவில் நன்றி மறவாத நடிகைகளில் தேவயானியும் ஒருவர். அவர் என்னுடைய மகள் போன்றவர்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.