பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த யோகி பாபு

பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த யோகி பாபு

பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த யோகி பாபு
Published on

பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ படத்திற்கு டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் நடிகர் யோகி பாபு.

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடித்துள்ளார். பிரஷாந்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை இயக்கியுள்ளார். ’அந்தாதூன்’படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கிறார்கள்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சமுத்திரகனி, வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

டப்பிங்கில் நடிகர் கார்த்திக், லீலா சம்சன், பூவையார், மனோ பாலா, நடிகர் பிரஷாந்த், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிடோர் கலந்துகொண்ட நிலையில், நடிகர் யோகி பாபு டப்பிங் பணிகளைத் நிறைவு செய்துள்ளார். படத்தின் இயக்குநர் தியாகராஜனுடன் யோகி பாபு டப்பிங் பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com