மத கஜ ராஜா பிரிமியர் ஷோவில் நடிகர் விஷால், சுந்தர்.சி
விஷால்புதிய தலைமுறை

“இவ்வளவு அன்பை நான் எதிர்பார்க்கலை; ரொம்ப ரொம்ப நன்றி... இப்போ நல்லா இருக்கேன்” - விஷால் நெகிழ்ச்சி

“நான் நலமாகத்தான் இருக்கிறேன். லவ் யூ ஆல். எல்லோரின் அன்புக்கும் நன்றி” - நடிகர் விஷால்
Published on

12 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருந்த `மத கஜ ராஜா’ திரைப்படம், இந்த பொங்கல் ரிலீஸுக்கு "நாங்களும் போட்டிக்கு வரலாமா?" என களம் இறங்கி உள்ளது. ஜனவரி 12 ரிலீஸாக உள்ள இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவெண்ட், கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் நடிகர் விஷால், இயக்குநர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி என பலரும் கலந்துகொண்டனர்.

மத கஜ ராஜா ஈவெண்ட்டில் ப்ரீ-ரிலீஸ் ஈவெண்ட்
விஜய் ஆண்டனி - விஷா - குஷ்பு - சுந்தர் சிபுதிய தலைமுறை

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், மிகுந்த கைநடுக்கத்துடனும் குரல் நடுக்கத்துடனும் பேசினார். பேசத்தொடங்கிய சில நிமிடங்களில் விஷால், “இந்த நேரத்தில், படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வை நான் நினைவுகூற விரும்புகிறேன். அது என்னவெனில், விஜய் ஆண்டனி என்னிடம் கூறுகையில், ‘எனக்கு ஒரு பாடகர் தேவைப்படுகிறார். அவர் இனிமேல் பாடவேக்கூடாது. அப்படி ஒரு பாடகர், நீங்கள்தான்’ என்றார்” எனக்கூறினார். இதைக்கூறுவதற்குள், விஷாலுக்கு கடுமையாக கைநடுக்கமும் உடல் நடுக்கமும் ஏற்பட்டது. மட்டுமன்றி குரலும் நடுக்கத்துடனே இருந்தது. இதை அறிந்த நிகழ்ச்சி குழுவினர், சோஃபோ ஒன்றை அவர் அருகே போட்டனர். பின் நிகழ்ச்சி முடியும்வரை சோஃபாவில் அமர்ந்தபடி விஷால் பேசினார்.

மத கஜ ராஜா பிரிமியர் ஷோவில் நடிகர் விஷால், சுந்தர்.சி
பொங்கல் 2025 ரேஸில் விஷால் - சுந்தர்.சி-யின் ‘மத கஜ ராஜா’... 12 வருடங்கள் தள்ளிப்போனது ஏன்?

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், விஷாலுக்கு என்ன ஆச்சு என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். பலரும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்ற பதிவிட்டு வந்தனர். (நிகழ்ச்சியிலேயே, ‘விஷாலுக்கு வைரல் காய்ச்சல் உள்ளது’ என தொகுப்பாளினி டிடி கூறியது குறிப்பிடத்தக்கது)

இதையடுத்து விஷால் தரப்பில், “விஷாலுக்கு கடுமையான வைரல் காய்ச்சல் உள்ளது. எனவே அவர் அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முழுமையான ஒய்வு தேவை. தவறான தகவல் எதுவும் பரவக்கூடாது” என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் ராஜ்குமார்.

மத கஜ ராஜா பிரிமியர் ஷோவில் நடிகர் விஷால், சுந்தர்.சி
விஷால் கைகள் நடுங்கியது ஏன்? வெளியான உண்மை - மருத்துவர் அறிக்கை சொல்வதென்ன?

தொடர்ந்து இன்றைய தினம் நடந்த பிரிமியர் ஷோவில் நடிகர் விஷால் பழைய உற்சாகத்துடன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “சென்ற நிகழ்ச்சியில் என் நிலையை பார்த்த பலரும் மெசேஜ் மூலமும், தொலைபேசி மூலமும் என்னிடம் நலம் விசாரித்தீர்கள். இந்தளவுக்கான அன்பை உண்மையில் நான் எதிர்ப்பார்க்கவில்லை. எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இவ்வளவு அன்புக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன், அடிமையாக இருக்கிறேன்.

மத கஜ ராஜா பிரிமியர் ஷோவில் நடிகர் விஷால், சுந்தர்.சி
நடிகர் விஷால், சுந்தர்.சிபுதிய தலைமுறை

நிறைய பேர் நான் அப்பல்லோ, காவேரி மருத்துவமனைகளில் அட்மிட் ஆகியிருப்பதாக எழுதினர். ஆனால் நான் எங்கும் அட்மிட் ஆகவில்லை. மார்க் ஆண்டனி படத்தில் சொல்வதுபோல, ‘நான் விழுவேன்னு நினைச்சியா? நான் விழ மாட்டேன்’ என்பதைதான் சொல்ல நினைக்கிறேன்.

மத கஜ ராஜா பிரிமியர் ஷோவில் நடிகர் விஷால், சுந்தர்.சி
கைநடுக்கத்துடன் பேசிய விஷால்... நேர்த்தியாக சூழலை சமாளித்த தொகுப்பாளினி DD!

என்னுடைய தன்னம்பிக்கையும், என் அப்பாவின் தன்னம்பிக்கையும்தான் என் பலம். இந்த இரண்டும் இருக்கும் வரை, எந்தவொரு தடையையும் சர்ச்சையையும் நான் தாண்டி வருவேன். நிறைய பேர், ‘3 மாதம் 6 மாதம் இவர் ஷூட்டிங் வரமாட்டேன்’ என்றெல்லாம் சொன்னார்கள். அதெல்லாம் இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். லவ் யூ ஆல். எல்லோரின் அன்புக்கும் நன்றி. சத்தியமாக, நான் சாகும்வரை இந்த அன்பையெல்லாம் மறக்கமாட்டேன். ஆத்மார்த்தமான உங்கள் அன்புக்கு, வெள்ளித்திரை மூலம் ஆத்மார்த்தமாக நல்ல படங்கள் கொடுப்பேன்.

மத கஜ ராஜா பிரிமியர் ஷோவில் நடிகர் விஷால், சுந்தர்.சி
நடிகர் விஷால், சுந்தர்.சிபுதிய தலைமுறை

மத கஜ ராஜாவின் முதல் பாகம்தான் இது. இரண்டாம் பாகமும் உங்களுக்கெல்லாம் பிடிக்கும். நீங்கள் எல்லோரும் என்னுடைய ஃபேன்ஸ் இல்லை... என்னுடைய நண்பர்கள். உங்கள் எல்லோருக்கும் என் நன்றி. பத்திரிகையாளர்கள் முதல் மக்கள் வரை அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். மத கஜ ராஜா திரைப்படம், நிச்சயம் வயிறு வலிக்க உங்கள் எல்லோரையும் சிரித்து மகிழவைக்கும்” என்றார் நெகிழ்ச்சியாக. இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com