\
எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை

எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை

எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நடிகர் விஷால் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெருவுக்கு தெரு உள்ள அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கே எம்ஜிஆர் புகைப்படத்தை வைத்து அதற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். புகழ்பெற்ற எம்ஜிஆரின் பாடல்களும் அங்கு ஒலிக்கின்றன.

இந்நிலையில் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு நடிகர் விஷால் மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஷால் தற்போது ‘சண்டைக்கோழி-2’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தளத்தில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு விஷால் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடந்து படத்தின் இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண் மற்றும் படக்குழவினர்கள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com