சற்று நேரத்தில் பிகில் டிரைலர் ! மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்

சற்று நேரத்தில் பிகில் டிரைலர் ! மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்
சற்று நேரத்தில் பிகில் டிரைலர் ! மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #Bigiltrailerday , #podravediya போன்ற ஹேஷ்டேக்குகளை தேசியளவில் டிரெண்ட் செய்தனர். மேலும், இன்னும் 50 நிமிஷத்தில் பிகில் டிரைலர் என கவுண்ட்டவுன் தொடங்கினர். மேலும் தலைவரின் தரிசனம் காண மரண வெயிட்டிங் என ரசிகர்கள் கொண்டாடி தள்ளி வருகின்றனர். 

இதனிடையே ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்.‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நாளை வெளியாகும் ‘பிகில்’ டிரெய்லர் எத்தனை நிமிடங்கள் ஓடக் கூடியதாக இருக்கும் யூகியுங்கள்…?” என ஒரு கேள்வியை கேட்டிருந்தார் அதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 பேர் வாக்களித்துள்ளனர்.

அந்த வாக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அர்ச்சனா கல்பாத்தி இன்று அதற்கான பதிலை ட்வீட் செய்துள்ளார். அதில் ”நேற்றைய வாக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 24% பேர் கூறிய பதில்தான் சரி.” என குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாக்கெடுப்பு முடிவின் படி இன்று வெளியாகும் ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் 2:30 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கும் என உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com