சினிமா
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா, ’’புனித் மரணம் என்பது நடந்திருக்கக்கூடாத ஒன்று. அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. என் குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்பகாலத்திலிந்து நெருக்கமானது. நான் என் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாய் கூறியிருக்கிறார். எப்போது சிரித்த முகத்துடனே இருக்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன்’’ என தெரிவித்தார்.