சூர்யா
சூர்யாpt web

சினிமாவிற்கு வந்த காரணம் தாயின் கடன்.. நினைவுகளைப் பகிர்ந்த சூர்யா

தனது தாயின் 25 ஆயிரம் ரூபாய் கடனை அடைப்பதற்காகத்தான் சினிமாவில் நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ் சினிமாவில் சூர்யாவின் இடம் என்பது, ரஜினி, கமல் போன்றவர்களது இடங்களைப் போன்ற நிலையான ஒன்று. அத்தகைய இடத்தை அவர் உருவாக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், சினிமாவில் தனது பயணம் என்பது திட்டமிடப்படாத ஒன்று என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன் அவர் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், தனது தாயிற்கு இருந்த கடனை அடைக்கவே சினிமாவிற்கு வந்ததாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

surya
surya

இது குறித்து ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில், 3 ஆண்டுகள் பனியன் நிறுவனம் ஒன்றில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்ததாகவும், அதே சமயத்தில் தனது தந்தை பத்து மாதங்களுக்கு மேலாக வேலை இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்தார்

சூர்யா
தவெக மாநாடு: “சாப்பாட்டு விஷயத்துல....” பொறுப்பாளர்களுக்கு பறந்த உத்தரவு

அப்போது தான் மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகள், அனைத்தையும் மாற்றியதாகவும், தனது தாயின் கடனும் அடைக்கப்பட்டதாகவும் கூறினார்.

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்த மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com