\
விஜய்
விஜய்pt web

தவெக மாநாடு: “சாப்பாட்டு விஷயத்துல....” பொறுப்பாளர்களுக்கு பறந்த உத்தரவு

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் வரும்போதே மதிய உணவை கொடுத்து அழைத்து வர வேண்டும் என பொறுப்பாளர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மறுநாள் விக்கிராவண்டி அருகில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்சியின் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு தேவையான மதிய உணவை, அழைத்து வரும் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து அவர்களுக்கு வழங்கி மாநாடு திடலுக்கு அழைத்து வர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

தவெக தலைவர் விஜய் அறிக்கை
தவெக தலைவர் விஜய் அறிக்கைஎக்ஸ் தளம்

கட்சி மாநாடு நடைபெறும் திடலின் அளவு 88 ஏக்கராக இருந்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் மாநாடு திடலுக்கு உள்ளே வர கூடாது என்பதற்காக மாநாடு நடைபெறும் திடலின் நான்கு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் உள்ளே சென்று அமர்ந்தால் அங்கு இருந்து பெரிய அளவில் நகர முடியாத சூழல் உள்ளது. இதனால் கட்சி சார்பில் மாநாட்டுக்கு மக்களை அழைத்து வர நியமனம் செய்து வரும் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு தேவையான உணவை முன்கூட்டியே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

விஜய்
“இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்” - தவெக தலைவர் விஜய்!

மாநாடு திடலில் இருக்கும்போது, குடிநீர் மற்றும் ஜுஸ், ஸ்னாக்ஸ் வழங்க கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்
மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com