இணையத்தில் கவனம் பெற்ற ‘தளபதி’!
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி மறுவெளியீடு செய்யப்பட்டிருக்கும் தளபதி திரைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இது புதுசா ரிலீஸான கமர்ஷியல் படத்தோட செலப்ரேஷன் இல்ல... 33 வருஷத்துக்கு முன்ன வெளியான தளபதி படத்தோட ரீரிலீஸ் மொமண்ட் தான் இது.. ஏன்னா? இது சூப்பர் ஸ்டாரோட கிளாசிக் படம்... ரஜினியோட பிறந்தநாள முன்னிட்டு இந்த படத்தை மறுவெளியீடு செஞ்சிருக்காங்க..
நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள்ல ரஜினி நடிச்சிருந்தாலும், அதுல ஒரு சில படங்கள்தான் ஆடியன்ஸோட ALL TIME FAVT-ஆ இருக்கும்... தளபதியும் அப்படித்தான்... OPENING LA மாஸா INTRO குடுத்த ரஜினி மேல, கேஸ் போடுவோம்னு கலக்டர் மிரட்டுவாரு.. அப்போ, திமிரா பேசுற போலீஸ் கிட்ட தொட்ரா பாக்கலாம்னு கோபமா சொல்ற SCENE-ஆ இருந்தாலும் சரி, நட்புன்னா என்னனு தெரியுமான்னு தேவா கிட்ட எதிர்பார்ப்போட கேக்குற SCENE-ஆ இருந்தாலும் சரி, படம் முழுக்க ரஜினிய பாத்து FIRE விட்டுட்டே இருக்கலாம்...
ஏன்னா? அவரோட நடிப்பு அப்படி இருக்கும்... 90ஸ் கிட்ஸ் பல பேர் தளபதிய தியேட்டர்ல பாத்திருக்க மாட்டாங்க... 2k kidsக்கு பலருக்கு இந்த படத்தை பத்தி முழுசா தெரிஞ்சிருக்குமான்னு தெரியாது... ரஜினியோட ஃபேன்ஸ் மட்டுமில்லாம, அடுத்த தலைமுறை ஆடியன்ஸும் தளபதி படம் பாத்து, VIBE பண்ற மாதிரி புது டெக்னாலஜில படத்தோட தரத்தை அதிகப்படுத்தி வெளியிட்டிருக்காங்க...
சில தியேட்டர்ல குறைந்த காட்சிகள் கொடுத்தாலும், வரவேற்பை பொறுத்து படம் ஓடுற நாட்கள அதிகப்படுத்தி இருக்காங்க... ரஜினி நடிச்ச மாஸ் படங்கள் நெறைய இருக்கப்போ, தளபதிய தேர்வு செஞ்சு வெளியிட தனிப்பட்ட காரணம் இருக்கறதா தகவல் பரவியிருக்கு.. லோகேஷ் கனகராஜோட கூலி படத்துக்கு பிறகு, ரஜினி மறுபடியும் மணிரத்னம் இயக்கத்துல நடிக்க இருக்கறதா சொல்லப்படுற நிலையில, அதுக்கு VIBE SET பண்ற மாதிரி தளபதி படத்தை களத்துல இறக்கிவிட்டிருக்கறதாவும் ஒரு தகவல் இருக்கு... தளபதி படத்த டிவியில பாத்து ENJOY பண்ண 90ஸ் கிட்ஸ்கு விஷ்வல் ட்ரீட்டாவும், தியேட்டர்ல பாத்து கொண்டாடுன 70S, 80s kidsக்கு மலரும் நினைவுகளாவும் அமைஞ்சிருக்கு தளபதி, ரீரிலீஸ்.