‘லால் சலாம்’ ஆடியோ லான்ச் | காக்கா கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில், “அப்பா சங்கி இல்லை; அப்படி இருந்திருந்தால் இந்தப் படத்தில் நடித்திருக்கவே மாட்டார்” என பேசியுள்ளார் ரஜினியின் மகளும், லால் சலாம் படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்ட்விட்டர்

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, ரஜினியை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்
‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

கிரிக்கெட் மற்றும் மத அரசியலை பற்றி பேசும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவின்போது, தான் சொன்ன காக்கா - கழுகு கதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விவாதம் ஆனதை நினைத்து வருந்துவதாக தெரிவித்தார். இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட வேண்டாம் என்றும் ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.

ரஜினிகாந்த்
“காக்கா, கழுகு எல்லாம் காட்டுல இருக்கும் தானே”- விஜய் சொன்ன குட்டி கதை! அதிர்ந்த அரங்கம்!
‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினிகாந்த் - லைகா சுபாஷ் கரண்
‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினிகாந்த் - லைகா சுபாஷ் கரண்

அந்தவகையில் ரஜினி பேசுகையில், “காக்கா-கழுகு கதை விஜய்யை விமர்சித்து கூறியதாக பலர் தவறாக புரிந்துகொண்டனர்; விஜய்யை விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் பேசுபொருளானது வருத்தம் ஏற்படுத்தியது காக்கா-கழுகு கதை விஜய்யை விமர்சித்து கூறப்பட்டதல்ல.

ரஜினிகாந்த்
Thalaivar 170 | ‘33 வருஷத்துக்கு அப்பறம் என் வழிகாட்டி அமிதாபச்சனோடு...’ - ரஜினி நெகிழ்ச்சி!

விஜய் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார்; விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை; எனக்கு நானே போட்டி; விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுகின்றனர்; எனக்கு என் படங்களே போட்டி; அவருக்கு அவரே போட்டி. இதை நாங்கள் இருவருமே தனிப்பட்ட முறையில் பல்வேறு இடங்களில் கூறியுள்ளோம்.

‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் - லைகா சுபாஷ் கரண்
‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் - லைகா சுபாஷ் கரண்

விஜய்யை போட்டியாக நான் நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கவுரவம் ஆகாது; விஜய் அரசியலில் நுழையவுள்ளார்; சமூக சேவைகளையும் செய்து வருகிறார். என்றும் நான் விஜய்யின் நலம் விரும்பியாகவே இருப்பேன்” எனக்கூறி காக்கா - கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நிகழ்வில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “அப்பாவ சங்கி-ன்னு சொல்லும்போது கோவம் வரும்.. இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது; சங்கியா இருந்தா அவர் லால் சலாம் படத்துல நடிச்சிருக்க மாட்டாரு” என்றார். தொடர்ந்து படம் உருவான விதம் குறித்து பல்வேறு தகவல்களை கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com