'சலார்' படத்திற்குப் பிறகு மீண்டும் கே.ஜி.எஃப் இயக்குநருடன் இணையும் பிரபாஸ்?

'சலார்' படத்திற்குப் பிறகு மீண்டும் கே.ஜி.எஃப் இயக்குநருடன் இணையும் பிரபாஸ்?
'சலார்' படத்திற்குப் பிறகு மீண்டும் கே.ஜி.எஃப் இயக்குநருடன் இணையும் பிரபாஸ்?

'சலார்' படத்திற்குப் பிறகு, 'கே.ஜி.எஃப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீலுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற பிரபாஸ் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'பாகுபலி' படம் மூலம் உலமெங்கும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் 'கே.ஜி.எஃப்' படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிப்பது கடந்த டிசம்பர் மாதம் உறுதியானது. 'சலார்' எனப் பெயரிடப்பட்ட அந்தப் படம் பன்மொழித் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் பிரசாந்த் நீல் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதன்படி, 'சலார்' திரைப்படம் 2022 ஏப்ரல் 14 உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையே, 'சலார்' படத்திற்குப் பிறகு மீண்டும் பிரசாந்த் நீலுடன் இணைந்து பணியாற்ற பிரபாஸ் ஒப்புக்கொண்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

எல்லாம் சரியாக நடந்தால், பிரபாஸ் - பிரசாந்த் நீலின் இரண்டாவது படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டில் தொடங்கும் என ஆந்திர சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ் - பிரசாந்த் நீல் இருவரும் இந்தத் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளனர். இருவரும் தங்கள் கைகளில் இருக்கும் படங்களை முடித்த பின்னர் இதில் இணைவார்கள் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் உள்ளிட்டோர் நடிக்க, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார். சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் தற்போது பிரபல கன்னட நடிகரான சுதீப் இணைந்துள்ளார். இவர் விபீஷணன் வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படமானது இந்தி, தெலுங்கு மொழிகளில் ஒரிஜினலாகவும், தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்தும் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com