மனைவியை கடத்தி விட்டனர் - பவர்ஸ்டார் போலீசில் புகார்
தமது மனைவியை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா, ஐ, கோலி சோடா உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா ’லட்டு திங்க ஆசையா’ திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பவர் ஸ்டார் மிகவும் பிரபலமானார்.
இவர் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த தயாநிதி என்பவரிடம் மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Also -> விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் - நடிகர் ரஜினிகாந்த்
இதையடுத்து நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் திடீரென காணாமல் போய் விட்டாதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அவரை சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சீனிவாசன் மனைவி ஜூலி கொடுத்த புகார் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சீனிவாசன் குடும்பத்தில் சொத்து பிரச்சினை காரணமாக ஊட்டிக்கு சென்று விட்டது தெரியவந்தது.
இந்நிலையில், தமது மனைவியை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் அளித்துள்ளார். பவர்ஸ்டார் சீனிவாசன் புகாரை அடுத்து சென்னை கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.