[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்!

viswasam-hastag-is-officially-trending-in-twitter

விஸ்வாசம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக நிலையிலும் விஸ்வாசம் ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது விஸ்வாசம். படப்பிடிப்பு தொடங்கியது முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். விஸ்வாசம் படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது.

இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் வரும் பொங்கல் அஜித்-ரஜினி மோதும் பொங்கலாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அதற்கு பிறகு விஸ்வாசம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால் பேட்ட திரைப்படம் குறித்து தினமும் அப்டேட்டுகள் வந்து கொண்டிருகிறது. விஸ்வாசம் அப்டேட் வேண்டுமென்று சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் பலரும் தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் பேட்ட’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து #PettaAudioLaunch என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆனால் எந்த அப்டேட்டும் வராத நிலையிலும் விஸ்வாசம் ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகலாம் என தகவல் வெளியானதை அடுத்து #Viswasam1stSingle என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையிலேயே சமூக வலைதளங்களை அஜித் ரசிகர்கள் ஆக்கிரமித்து வருவது விஸ்வாசம் திரைப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பை காட்டுவதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close