த்ரிஷா விவகாரம் | ”வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்” - நடிகர் பார்த்திபன் மீண்டும் கருத்து!
விஜய்-த்ரிஷா இருவரும் சேர்ந்து ஒரே நிற ஆடையுடன் பொதுவெளியில் தோன்றியது சமூகவலைதளத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடிகர் பார்த்திபன், த்ரிஷாவின் புகைப்படத்தை பார்த்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்குமான விவாகரத்து பிரச்னை பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், விஜய்-த்ரிஷா இருவரும் சேர்ந்து ஒரே நிற ஆடையுடன் பொதுவெளியில் தோன்றியது சமூகவலைதளத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தசூழலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், த்ரிஷாவின் புகைப்படத்தை பார்த்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவர் பேசுகையில், ”குந்தவை வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில், ”ஒருவரிடம் மைக் இருப்பதால் அவர் கூறும் கருத்து புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள்தனத்தை சத்தமாக கூறும். அறிவு இல்லாத வார்த்தைகள், அவை யாரை நோக்கிச் செல்கின்றன என்பதைவிட, பேசுபவரைப் பற்றி அதிகம் கூறுகின்றன” என த்ரிஷா பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து பதிவிட்ட நடிகர் பார்த்திபன், ”எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில், வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை” என பதிவிட்டிருந்தா. ஆனாலும், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதுதொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பார்த்திபன், “விழாவில் த்ரிஷா குறித்துப் பேசியது திட்டமிட்ட ஒன்றல்ல; நண்பர் விஜயின் அரசியல் பயணம் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே அந்தக் கருத்தைச் சொன்னேன். இப்படி ஒரு கருத்தை த்ரிஷா பதிவிடுவார் என தெரிந்திருந்தால் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன். கரூர் பிரச்னையில் விஜய்க்கு ஏற்படாத பாதிப்பு த்ரிஷா உடன் சென்ற நிகழ்வால் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

