எம்புரான்
எம்புரான் முகநூல்

எம்புரான் படத்தின் காட்சிகளை நீக்க முடிவா? - மன்னிப்புக் கேட்ட மோகன்லால்!

“லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருப்பொருள்கள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன்." - மோகன்லால்.
Published on

மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்புரான்
Empuraan | லூசிஃபர் டூ L 2 எம்புரான்... ஈர்க்கிறதா இந்த இரண்டாம் பாகம்..?

எம்புரான் படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்க.

இப்படத்தில் 2002 நடந்த குஜராத் கலவரம் பற்றிய குறிப்புகள் இருப்பதாகவும், இதை பயன்படுத்திதான் பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும், இந்து மதத்தை இழிவுப்படுத்தும் படமாக இருக்கிறது என்றும் வலதுசாரி குழுக்கள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் கண்டத்தை பதிவு செய்தனர். மேலும், படத்தின் சில சர்ச்சைக்குரிய காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கண்டக் குரல்களை எழுப்பினர். இது சர்ச்சையாக மாறியது.

இந்நிலையில், இந்த சர்ச்நடிகர் மோகன்லால், “லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருப்பொருள்கள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன். ஒரு கலைஞனாக என்னுடைய எந்தப் படமும் எந்த அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்காமல் பார்த்துக் கொள்வது எனது கடமை.

எனவே, எம்பிரான் குழுவினரும், நானும் எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு வருந்துகிறோம். மேலும் படத்தின் பின்னணியில் உள்ள பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து, இதுபோன்ற விஷயங்களை படத்தில் இருந்து நீக்க நாங்கள் ஒன்றாக முடிவு செய்துள்ளோம்.

கடந்த நான்கு தசாப்தங்களாக எனது திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். அதை விட மோகன்லால் யாரும் இல்லை என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

எம்புரான்
சர்ச்சையில் சிக்கிய எம்புரான்... ஹிந்து விரோத கருத்து? கேரள முதல்வர் போட்ட பதிவு!

முன்னதாக, மலையாளத் திரையுலகத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் எம்புரான் படத்தின், நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு எதிராக சிலர் பரவலான வெறுப்பு பிரச்சாரங்களை பரப்பிவருகின்றனர். இது கண்டிக்கதக்கது என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com