மே மாதம் வெளியாகும் கார்த்தி - முத்தையா கூட்டணியின் ‘விருமன்’

மே மாதம் வெளியாகும் கார்த்தி - முத்தையா கூட்டணியின் ‘விருமன்’

மே மாதம் வெளியாகும் கார்த்தி - முத்தையா கூட்டணியின் ‘விருமன்’
Published on

நடிகர் கார்த்தியின் ’விருமன்’ வரும் மே மாதம் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.

இப்படத்தின், படப்பிடிப்பு கடந்த தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் 60 நாட்கள் நடைபெற்று கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. படம் குறித்து நடிகர் கார்த்தி “ என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. யதார்த்தமானவர். அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை. மீண்டும் ’விருமன்’ மூலம் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்ததில் சந்தோஷம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி” என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ‘விருமன்’ வரும் மே மாதம் 19 அப்படியில்லையென்றால் 26 ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், வேல்முருகன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com