“சினிமாவில் விஜய் அண்ணனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...” - நடிகர் ஜெயம் ரவி

திரைத்துறையில் நடிகர் விஜய்யின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி - விஜய்
ஜெயம் ரவி - விஜய்புதிய தலைமுறை

மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களோடு இணைந்து சைரன் திரைப்படத்தை காண நடிகர் ஜெயம் ரவி நேற்று சென்றார். அப்போது ரசிகர்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து ரசிகர்களுடன் சேர்ந்து சைரன் திரைப்படத்தை கண்டுகளித்தார் ஜெயம் ரவி.

நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி, ”நடிகர் சங்க கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு அதற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

ஜெயம் ரவி - விஜய்
ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான ‘நேரு’ திரைப்படம் சொல்ல வரும் கருத்து என்ன?

தொடர்ந்து அவரிடம் ‘நடிகர்கள் எல்லாரும் கட்சி தொடங்குகிறார்கள்... நீங்களும் தொடங்குவீர்களா?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை” என்றார்.

தொடர்ந்து ‘விஜய்க்கு அரசியலில் ஆதரவு கொடுப்பீர்களா?’ என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என்னுடைய வட்டம் சினிமா மட்டும்தான். அதற்கு மட்டுமே இப்போது பதிலளிக்க முடியும். அண்ணன் (விஜய்யை குறிப்பிட்டு) வீட்டுக்கு அழைத்தால்வேண்டுமானால் அங்கு செல்வேன். திரைத்துறையை பொறுத்தவரை விஜய் அண்ணனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com