சினிமா
பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானார்
பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானார்
தமிழில் சூர்யா நடித்த “ஆறு”, தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்கள் மூலமாக அறியப்பட்ட தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் காலமானார்.
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வில்லனாகவும், காமெடியனாகவும் பல படங்களில் நடித்த ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. இன்று ஆந்திராவின் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் உயிர் பிரிந்தது.
இவர் சமரசிம்ஹா ரெட்டி, நரசிம்ஹா நாயுடு, ரெடி, கிக், கபாடி கபாடி படங்களிலும் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தது குறிப்பிடத்தக்கது.