“அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” - கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன்!

திருநெல்வேலியில் நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடந்துமுடிந்துள்ளது
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி@AshokSelvan

நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மூன்றாவது மகள், நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அசோக் செல்வனை இன்று கரம்பிடித்துள்ளார்.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி@AshokSelvan

இருவரும் இணைந்து நடித்த ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின்போது, இருவருக்குள்ளும் காதல் உருவானதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் இன்று கரம்பிடித்துள்ளனர்.

திருநெல்வேலியில் இட்டேரி என்ற இடத்திலுள்ள சேது அம்மாள் பண்ணையில், திருமணம் நடந்துள்ளது. முன்னதாக இவர்களின் திருமண அழைப்பிதழ், மன்றல் விழா அழைப்பிதழ் என்ற பெயரில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி
கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமணம்.. இணையத்தில் வைரலாகும் அழைப்பிதழ்!
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதி@AshokSelvan

திருமணம் குறித்து நடிகர் அசோக் செல்வன் தனது சமூகவலைதள பக்கத்தில்,

“செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”

எனக்குறிப்பிட்டு திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவையும் தற்போது வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com